×

மயிலம் அருகே பரிதாபம் வேன் மீது அரசு பஸ் மோதல் சென்னையை சேர்ந்த 4 பேர் பலி

மயிலம்: மயிலம் அருகே வேன் மீது அரசு பேருந்து மோதியதில் ெசன்னையை சேர்ந்த 4 பேர் பலியாயினர். சிவகங்கை மாவட்டம் எஸ்.காரைக்குடியை சேர்ந்தவர் அங்குசாமி (50). டிரைவர். இவர் சென்னை நெற்குன்றம் பகுதியில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் தங்கி பள்ளி வேன் ஓட்டி வந்தார். இவரது உறவினர் ஒருவர் இறந்து விட்டதால் சொந்த ஊருக்கு தனது மனைவி லட்சுமி (48), மகன் விக்னேஸ்வரன் (30), மருமகள் ரேகா (28), பேரக்குழந்தைகள் ரித்தீஷ் (2), பவித்ரன் (4), உறவினர்கள் உமாபதி (40), இவரது மனைவி விஜயலட்சுமி (32) ஆகியோருடன் வேனில் சென்றார். பின்னர் மீண்டும் சென்னைக்கு வேனில் திரும்பி கொண்டிருந்தார். வேனை அங்குசாமி ஓட்டினார்.

 நேற்று அதிகாலை 3.45 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே விளங்கம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு விரைவு பேருந்து திடீரென தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிரிவு சாலை வளைவில் திரும்பி எதிர் திசையில் உள்ள சாலைக்கு வந்தது. அப்போது வேனும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனை ஓட்டி வந்த அங்குசாமி, அவரது மனைவி லட்சுமி, உறவினர்கள் உமாபதி, விஜயலட்சுமி ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

வேனில் இருந்த விக்னேஸ்வரன், இவரது மனைவி ரேகா, குழந்தைகள் ரித்தீஷ், பவித்ரன் ஆகிய 4 பேரும் பஸ்சில் ஓட்டுநர் அருளானந்தம் (57), சென்னை சோழிங்கநல்லூரை சேர்ந்த குமரவேல் (61 )ஆகிய 5 பேரும் 9 பேர் பலத்த காயம் அடைந்தனர். தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மயிலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : passengers ,Chennai ,bus accident ,Mayilam , Mayilam, van, government bus collision, Chennai, 4 killed
× RELATED சேலம் – கொச்சி விமானம் திடீர் ரத்து: 50...