×

பைனலில் சிந்துவை வீழ்த்தினார்: 4வது முறையாக சாய்னா சாம்பியன்

கவுகாத்தி: தேசிய சீனியர் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், சாய்னா நெஹ்வால் 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றதுடன் தங்கப் பதக்கத்தை தக்கவைத்துக் கொண்டார். கவுகாத்தியில் நேற்று நடந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் நட்சத்திர வீராங்கனைகள் சாய்னா நெஹ்வால் - பி.வி.சிந்து மோதினர். இரு வீராங்கனைகளும் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்ததால் முதல் செட் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. சாய்னா  21-18 என்ற கணக்கில் முதல் செட்டை வசப்படுத்தி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய அவர் 21-18, 21-15 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டதுடன் 4வது முறையாக தேசிய போட்டியில் தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். சவுரவ் ஹாட்ரிக்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் 17 வயது இளம் வீரர் லக்‌ஷியா சென்னுடன் மோதிய நடப்பு சாம்பியன் சவுரவ் வர்மா 21-18, 21-13 என்ற நேர் செட்களில் வென்று தொடர்ந்து 3வது முறையாக தேசிய சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sindhu ,Saina Champion , Final Sindhu, Sunny Champion
× RELATED கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து 40...