×

மாநகராட்சி பொது கழிப்பறைகளை கூகுள் வரைபடத்தில் அறியலாம்

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக  853 இடங்களில் 6,701 இருக்கை வசதிகள் கொண்ட பொதுக் கழிப்பிடங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்கள் அருகாமையில் உள்ள பொதுக் கழிப்பிடங்களின் இருப்பிடங்களை அறிந்துகொள்ள ஏதுவாக, மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்துடன் இணைந்து சென்னையில் உள்ள அனைத்து பொதுக் கழிப்பிடங்களையும் கூகுள் வரைபடத்தில் பதிவு செய்துள்ளது. பொதுமக்கள் கூகுள் வரைபடத்தில் Toilet  என டைப் செய்தால், தங்களின் அருகாமையில் உள்ள பொதுக் கழிப்பிடங்களின் விவரங்கள், இருப்பிடம்,முகவரியை தெரிந்து கொள்ளலாம். மேலும், பொதுமக்கள் பொதுக் கழிப்பிடத்தின் தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்த தங்களின் மதிப்பீடு மற்றும் கருத்துக்களை தெரிவிக்கும் வகையிலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Corporation , Corporation, public toilets, google
× RELATED சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை...