புதிய வண்ணத்தில் பஜாஜ் பல்சர் என்எஸ் 200

பஜாஜ் பல்சர் என்எஸ் 200 பைக், வடிவமைப்பு, சிறந்த இன்ஜின் மற்றும் சரியான விலையில் கிடைக்கும் மாடலாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 2012ல் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மாடல், தொடர்ந்து வாடிக்கையாளர்களை வசீகரித்து வருகிறது. எனினும், சந்தைப்போட்டி மிகுதியால் வாடிக்கையாளர்களை வளைக்கும் விதமாக அவ்வப்போது புதிய அம்சங்களுடன் இந்த பைக் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது மஞ்சள் வண்ணத்தில் புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் டேங்க், ஹெட்லைட் கவுல், இன்ஜின் கார்டு உள்ளிட்டவை மஞ்சள் வண்ணத்திலும், பிற பாகங்கள் கருப்பு வண்ணத்திலும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த பைக்கின் சக்கர ரிம்மில் மஞ்சள் வண்ண ஸ்டிக்கர் அலங்காரம் கவரும் வகையில் உள்ளது. அடுத்து, பெட்ரோல் டேங்க் கவுல், முன்புற மட்கார்டு, பின்புற பென்டர் ஆகிய பகுதிகளில் பாலிஷ் செய்யப்பட்ட அலுமினிய பாகங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த மஞ்சள் வண்ண பல்சர் என்எஸ்200 பைக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்டதாக கிடைக்கும். ஏற்கனவே மஞ்சள் வண்ணத்தில் கிடைத்த நிலையில், இந்த வண்ணம் விலக்கப்பட்டது. தற்போது மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த பைக்கில் 199 சிசி இன்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 23.2 பிஎச்பி பவரையும், 18.3 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் முன்சக்கரத்தில் 280 மி.மீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் போர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன. 1.11 லட்சம் மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: