×

36 கோடி செலவில் நடைபெறும் ஹூமாயூன் மகால் சீரமைப்பு 18 மாதங்களில் முடிக்க இலக்கு

சென்னை : 36 கோடி செலவில் நூற்றாண்டு பழமையான ஹூமாயூன் மகால் புனரமைப்பு பணியை கண்காணிக்க செயற்பொறியாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் நூற்றாண்டுகள் பழமையான ஹூமாயூன் மகால் கட்டிடம் கடந்த 2012ல் ஏற்பட்ட தீ விபத்தை ஒரு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 2013ல் கட்டிடத்தின் ஒரு பகுதியில் விரிசல் ஏற்பட்டு மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. இதை தொடர்ந்து அந்த கட்டிடத்தை புனரமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. தொடர்ந்து, பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட கோட்டம் சார்பில் பாரம்பரிய கட்டிடங்களை புனரமைப்பதற்கான அறிக்கை தயாரிக்கும் பணியில் இறங்கியது. கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் மனோகரன் தலைமையிலான பொறியாளர்கள் குழுவினர் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து ₹38 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அறிக்கை ஒன்றை தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் ₹36 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து கடந்த டிசம்பர் 18ம் தேதி தமிழக பொதுப்பணித்துறை சார்பில் டெண்டர் விடப்பட்டது. இதில், 4 ஒப்பந்த நிறுவனங்கள் விண்ணப்பித்திருப்பது. இதில், குறைவாக ஒப்பந்த புள்ளி கோரியதாக மாணிக்கம் அன்கோ என்ற நிறுவனத்திற்கு டெண்டர் இறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அந்த நிறுவனம் சார்பில் புனரமைப்பு பணிகளை தொடங்கியது. இப்பணிகளை 18 மாதங்களுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்ய செயற்பொறியாளர் கல்யாணசுந்தரம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் புனரமைப்பு பணிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுவார்கள் என்று பொதுப்பணித்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறும் போது, ‘பாரம்பரிய கட்டிடங்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கு முன்பு முதலில் வீடியோவில் பதிவு செய்யப்படும். அதன்பிறகு, கட்டிடங்களில் புனரமைப்பு பணிகள் தொடங்கப்படுகிறது. எப்படி இருந்ததோ அதே போன்று புனரமைப்பு பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இந்த புனரமைப்பு பணியை செயற்பொறியாளர் தலைமையிலான குழுவினர் அவ்வ போது ஆய்வு செய்வார்கள்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Humayun Mahal , Humayun Mahal, a 36-crore expenditure, aims to complete 18 months
× RELATED சென்னை சேப்பாக்கத்தில் தீ விபத்தால்...