×

கடற்கரை - வேளச்சேரி இடையே மின்சார ரயில்கள் ரத்து

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை கடற்கரையில் இருந்து நாளை காலை 8, 8.20, 8.40, 9, 9.20, 9.40, 9.50, 10, 10.20, 10.40, 11, 11.20, 11.40, 12, 12.20, 12.40, 1, 1.20, 1.40 ஆகிய நேரங்களில் வேளச்சேரி வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. பிற்பகல் 2 மணியில் இருந்து சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை ரயில்கள் இயக்கப்படும்.
அதேப்போல், வேளச்சேரியில் இருந்து காலை 8.10, 8.30, 8.50, 9.10, 9.30, 9.50, 10.10, 10.30, 10.40, 10.50, 11.10, 11.30, 11.50, 12.10, 12.30, 12.50, 1.10, 1.30 மற்றும் 1.50 ஆகிய நேரங்களில் சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. பிற்பகல் 2 மணியில் இருந்து வேளச்சேரி - சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில்கள் இயக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவடி- அரக்கோணம் வழித்தடம்: மூர்மார்கெட்டில் இருந்து திருத்தணி வரை  இயக்கப்படும் மின்சார ரயில் மூர்மார்க்கெட்டில் இருந்து ஆவடி வரை ரத்து  செய்யப்பட்டு நாளை பிற்பகல் 3 மணிக்கு ஆவடி முதல் திருத்தணி வரை  இயக்கப்படுகிறது. மேலும் அரக்கோணம் முதல் மூர்மார்க்கெட் வரையும்,  திருவள்ளூர் முதல் மூர்மார்க்கெட் வரையும், பட்டாபிராம் முதல்  மூர்மார்க்கெட் வரையும், திருத்தணி முதல் மூர்மார்க்கெட் வரை இயக்கப்படும்  மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டு ஆவடி முதல் மூர்மார்க்கெட் வரை  இயக்கப்படுகிறது.

பிற்பகல் 1.50 மணிக்கு ஆவடி - பட்டாபிராம்  சைட்டிங் வரையும், காலை 9.45 மணிக்கு மூர்மார்க்கெட்- அரக்கோணம் வரையும்,  காலை 11.55, 1.50, 2.25 மணிக்கு அரக்கோணம் - திருத்தணி வரையும், பிற்பகல்  1.15 மணிக்கு திருவள்ளூர் - மூர்மார்க்கெட் வரையும், காலை 11.10 மணிக்கு  ஆவடி - அரக்கோணம் வரையும் பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். கும்மிடிப்பூண்டி வழித்தடம்: மூர்மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி வரை இயக்கப்படும் மின்சார ரயில், மூர்மார்க்கெட்டில் இருந்து 18ம் தேதி பிற்பகல் 12.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது. கும்மிடிப்பூண்டி - மூர்மார்க்கெட் வரை 18ம் தேதி பிற்பகல் 2.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்ட்ரல் - ஜெய்ப்பூர் வாராந்திர அதிவிரைவு எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் இருந்து நாளை மாலை 5.40 மணிக்கு இயக்கப்படும் ரயில் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Velachery , Electricity train cancels , coastal and Velachery
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...