×

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் தொடக்கம்: 31 லட்சம் பேர் தேர்வு எழுதினர்

சென்னை: சிபிஎஸ்இ வொக்கேஷனல் பிரிவு மாணவர்கள், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கியது. நாடு முழுவதும் 31 லட்சம் பேர் தேர்வு எழுதினர். சிபிஎஸ்சி பிளஸ் 2 வொக்கேசனல் பிரிவு மாணவர்களுக்கான  பொதுத்தேர்வு, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாடு முழுவதும் நேற்று தொடங்கியது. 2018-19ம் ஆண்டிற்கான சிபிஎஸ்சி, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 15ம் தேதி முதல் ஏப்ரல், 4ம் தேதி வரை நடைபெறும் என்று, சிபிஎஸ்சி நிர்வாகம் அறிவிருந்தது. அதன்படி ேநற்று காலை, 10.30 மணிக்கு தேர்வு தொடங்கியது. நாடு முழுவதும், 21 ஆயிரத்து, 400 பள்ளிகளில் தேர்வு நடைபெறுகிறது. அதில் வொக்கேசனல் பிரிவை சேர்ந்த 12 லட்சத்துக்கு, 87 ஆயிரத்து, 359 பேர் பிளஸ் 2 மாணவர்கள் உள்பட 10ம் வகுப்பு மாணவர்கள் சேர்த்து 31 லட்சத்து 14 ஆயிரத்து 821 பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர்.

தேர்வு எழுதினர். பிற பிரிவு மாணவர்களுக்கு மார்ச் மாதத்தில் தேர்வு தொடங்க உள்ளது. இதற்காக நாடு முழுவதும், 4 ஆயிரத்து 974 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு முறையாக நடைபெறுவதை கண்காணிக்க, 10 ஆயிரம் பறக்கும் படையினர் உட்பட, கண்காணிப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் என, 3 லட்சம் பேர் பணியில்  நியமிக்கப்பட்டுள்ளனர். வினாத்தாள் கசிவு, தேர்வில் முறைகேடு நடந்ததாக ஆதரமில்லாத நிலையில், சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிப்போரை கண்காணித்து போலீசில் புகார் அளிக்கவும் சிபிஎஸ்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CBSE ,Elections , CBSE General exam
× RELATED விருகம்பாக்கம் பாலலோக் சிபிஎஸ்இ...