×

புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த தமிழக வீரர்கள் 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி

சென்னை: காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழக வீரர்கள் 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்குவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தின் ரத்னிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பகுதியை பாதுகாப்பு படைவீர்ரகள் சுற்றி வளைத்தனர். இதன் காரணமாக எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில், துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடந்தது. இதில், பாதுகாப்பு படை வீரர் வீரமரணம் அடைந்தார். எனினும், இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

300 கிலோ எடை கொண்ட வெடிபொருட்களை எஸ்சுவி காரில் ஏற்றி வந்த ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாதி சிஆர்பிஃஎப் வாகனத்தின் மீது மோதச் செய்து நடத்தப்பட்ட தாக்குதலில் 41 வீரர்கள் பலியாயினர். புல்வாமா - ஜம்மு நெடுஞ்சாலையில் நடந்த இந்த தாக்குதல் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த தாக்குதலில், தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், சீவலப்பேரியை சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் வீரர் சுப்பிரமணியனும் உயிரிழந்தார். இவரது மரணத்தால் குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தை சேர்ந்த சிவசந்திரன் என்பவரும் இந்த தாக்குதலில் உயிரிழந்தார். இந்நிலையில் காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழக வீரர்கள் 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்குவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

துணை முதலமைச்சர் கண்டனம்

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : families ,soldiers ,Tamil Nadu ,attack ,Pulwama , Pulwama attack, CRPF soldiers, Chief Minister Edappadi Palinasami, Kashmir, soldiers
× RELATED மண்டபம் அருகே பறக்கும் படையினர் தீவிர சோதனை