×

கல்வித்துறையில் 40 பேருக்கு டிஇஓ பதவி உயர்வு

சென்னை: அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், மற்றும் அதற்கு நிகரான பணிநிலையில் பணியாற்றும் அலுவலர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதற்கு நிகரான பணியிடங்களில் தற்காலிக அடிப் படையில் பதவி உயர்வு, பணியிட மாறுதல் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, பள்ளிக் கல்வி இயக்குநர் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மேற்கண்ட பதவி உயர்வு வழங்க சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் 40 பேர் பதவி உயர்வு பெறுகின்றனர். இதன்படி, சென்னை என்.கே.பி அரசு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பி.கோவிந்தசாமி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக உதவி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் விடுதலைப் பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு, பதவி உயர்வு மூலம் பெரியகுளம் மாவட்ட கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆய்வாளர் மாரியப்பன் கோவில் பட்டி மாவட்ட கல்வி அலுவலராகவும், அருப்புக்கோட்டை கோவிலங்குளம் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி,வத்தலகுண்டு மாவட்ட கல்வி அலுவலராகவும், கல்குறிச்சி தலைமை ஆசிரியர் மாரியம்மாள், பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலராகவும், நியமிக்கப்பட்டுள்ளனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : TEO , Education, TEO promotion
× RELATED டிஇஓ இன்சார்ஜ் விவகாரம் சிஇஓவை நேரில் சந்தித்து ஆசிரியர்கள் போர்க்கொடி