×

4 நாட்களில் மெட்ரோ ரயிலில் 7.34 லட்சம் பேர் இலவச பயணம்

சென்னை: கடந்த 4 நாட்களில் 7.34 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் இலவச பயணம் மேற்கொண்டுள்ளனர்.  சென்னையில் 45 கி.மீட்டர் தூரத்திற்கு தற்போது மெட்ரோ ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. கடந்த 10ம் தேதி முதல் திட்டத்தின் இறுதிகட்டமாக டி.எம்.எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான சேவை பொதுமக்களுக்காக தொடங்கப்பட்டது. அன்றைய தினம் இரவு 10 மணி வரையில் அனைத்து வழித்தடங்களிலும் சோதனை ஓட்டம் நடந்தது. அப்போது, பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்த இலவச சேவையானது மேலும் 4 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. இலவச சேவையை முன்னிட்டு அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் கடந்த 4நாட்களாக மக்கள் கூட்டம் அலைமோதியது. 4 நாட்களில் மட்டும் 7லட்சத்து 34 ஆயிரத்து 379 பேர் மெட்ரோ ரயில் பயணம் செய்துள்ளனர்.

இதுகுறித்து மெட்ரோ அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த 10ம் தேதி முதல் அனைத்து வழித்தடமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அனைத்து தரப்பட்ட மக்களும் மெட்ரோ ரயில் சேவையால் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரையில் இலவசமாக அனுமதிக்கப்பட்டனர். அதன்படி, 11ம் தேதி 2 லட்சத்து 1,556 பேரும், 12ம் தேதி 2 லட்சத்து 10 ஆயிரத்து 792 பேரும் நேற்று முன்தினம் 13ம் தேதி 2 லட்சத்து 53 ஆயிரத்து 31 பேரும் இலவச சேவையால் பயனடைந்துள்ளனர். 10 முதல் 13ம் தேதி வரையில் 4 நாட்களில் மட்டும் மொத்தம் 7லட்சத்து 34ஆயிரத்து 379 பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர். இவ்வாறு கூறினார்.இதேபோல், இலவச சேவை முடிந்து நேற்று அனைத்து வழித்தடங்களிலும் வழக்கம் போல் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் காலை மற்றும் மாலைகளில் மட்டுமே சீரான கூட்டம் காணப்பட்டது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : trips ,Metro ,trains , Metro train
× RELATED சென்னை மெட்ரோ ரயில்களில் ஏப்ரல்...