×

சின்னதம்பியை டாப் சிலிப் முகாம் கொண்டு செல்ல திட்டம்

உடுமலை: உடுமலையில் இருந்து சின்னதம்பி யானை பிடிக்கப்பட்டு டாப் சிலிப் கொண்டு சென்று பராமரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.  திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கண்ணாடிபுதூர்    பகுதியில் சின்னதம்பி யானை உலா வருகிறது.  சின்னதம்பியை பிடிக்க கும்கி  யானைகளை   கொண்டு வனத்துறையினர் முயன்றனர்.  ஆனால்  அவர்களது  முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை. இந்நிலையில் சின்னதம்பி யானையை பிடித்து முகாமில் வைக்க நேற்று முன்தினம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இது குறித்து நேற்றுமுன்தினம்   மாலை பொள்ளாச்சியில் வனத்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதுபற்றி உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘சின்னதம்பி யானையை பிடிப்பதில் பல்வேறு சிக்கல் உள்ளன. ஆனாலும் அதனை    பத்திரமாக பிடிப்ேபாம் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றார். சின்னதம்பியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் நேற்று மாலை வரை இறங்கவில்லை.

இந்நிலையில், கண்ணாடிபுதூர்    பகுதியில் உலா வந்த சின்னதம்பி யானை அங்குள்ள கரும்பு தோட்டத்தில் தூங்கிக்ெகாண்டிருந்தது. மாலை 4 மணியளவில் வழக்கம் போல அப்பகுதியில் நடமாடியது. அது தற்போது   முகாமிட்டுள்ள இடம் சேறும் சகதியுமான, லாரி செல்ல முடியாத இடமாக உள்ளது. அது வேறு இடத்துக்கு மாறியதும் லாரியில் ஏற்றி செல்ல வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
 
காட்டில் விடப்போவதில்லை:
இதனிடையே, கண்ணாடிபுதூரில் சின்னதம்பி யானையை பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கணேசன் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சின்னதம்பியை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, டாப்சிலிப்புக்கு கொண்டு செல்லப்படும். யானையை கொண்டு செல்ல லாரி வரவழைக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கூடுதலாக கும்கி யானைகள் கொண்டுவரப்படும். கும்கி யானைகள், சின்னதம்பி யானையை லாரியில் ஏற்ற மட்டுமே பயன்படுத்தப்படும். சின்னதம்பியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். சின்னதம்பியை பிடித்து கைதேர்ந்த பாகன்களை வைத்து பயிற்சி அளிக்கப்படும். இரு மாத பயிற்சிக்கு பின்னர், டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், வளர்ப்பு யானைகளுடன் சின்னதம்பி வைத்து பராமரிக்கப்படும்.
இவ்வாறு கணேசன் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chinnathambi ,Top Chile Camp , Chinnathambi, planning to go to camp
× RELATED கீழப்பழுவூர் அருகே டூவீலர் மீது அரசு...