×

தேசிய பேட்மின்டனில் பரபரப்பு ‘ஆடுகளம் ரொம்ப மோசம்’: விளையாட மறுத்த சாய்னா

கவுகாத்தி: தேசிய சீனியர் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடுகளம் சரியில்லையென  கூறி வீராங்கனை சாய்னா நெஹ்வால் விளையாட மறுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அசாம் மாநிலம், கவுகாத்தியில் தேசிய சீனியர் ேபட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று துவங்கின. இதில் நடப்பு சாம்பியனான சாய்னா நெஹ்வால், பி.வி.சிந்து உள்ளிட்ட வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். நேற்று  காலை மகளிர் ஒற்றையர் போட்டியில் சாய்னா விளையாட வந்தபோது, ஆடுகளத்தை கண்டு கடும் அதிருப்தி தெரிவித்தார். ‘‘ஆடுகளம் விளையாடும் தரத்தில் இல்லை. மிகவும் மோசமாக உள்ளது. இங்கு என்னால் விளையாட முடியாது’’ என்று பேட்மின்டன் சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்தார். ஏற்கனவே கடந்தாண்டு இறுதியில் இவருக்கு  தாடையில் காயம் ஏற்பட்டது. மேலும், அடுத்தாண்டு ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க உள்ளார். எனவே, மோசமான ஆடுகளத்தில் விளையாடினால் மீண்டும் காயம் ஏற்படும் என நிர்வாகிகளிடம்  தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து இந்திய பேட்மின்டன் சங்க செயலாளர் ஓமர் ரஷீத் மற்றும் நிர்வாகிகள் ஆடுகளத்தை பார்வையிட்டனர். அப்போது ஒரு சில இடங்களில் மரப்பலகைகள் சரிசமமாக இல்லாமல் வெளியே தெரிந்தன.  இதனைத்தொடர்ந்து ஊழியர்கள் பலகைகளை சரி செய்தனர். தொடர்ந்து இந்த ஆடுகளத்தில் நடக்க இருந்த போட்டிகள் நேற்று மாலைக்கு ஒத்திவைக்கப்பட்டன.இதுகுறித்து ஓமர் ரஷீத் கூறுகையில், ‘‘ஆடுகளத்தில் ஒரு சில இடங்களில் மரப்பலகைகள் சரி செய்யப்படாமல் இருந்தன. இதனால் சாய்னா, காஷ்யப், சாய் பிரனீத் ஆகியோர் விளையாட மறுத்தனர். இதனைத்தொடர்ந்து  பிரச்னைக்குரிய இடங்கள் சரி செய்யப்பட்டன. உள்ளரங்கில் ஒரு சில போட்டிகள் மாற்றப்பட்டுள்ளன’’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bad ,Saina , 'Bad pitch', national badminton, Saina
× RELATED பேட்மின்டன் போட்டிகள் ஒத்திவைப்பு