×

விதர்பா 425 ரன் குவிப்பு: கர்னேவர் அபார சதம்

நாக்பூர்: இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்னேவர் அபார சதம் அடிக்க விதர்பா அணி முதல் இன்னிங்சில் 425 ரன் குவித்து முன்னிலை பெற்றது.ரஞ்சி சாம்பியன் விதர்பா, இதர இந்தியா அணிகளுக்கு இடையேயான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி நாக்பூரில் கடந்த 12ம் தேதி தொடங்கியது. 5 நாள் டெஸ்ட் போட்டியில் முதலில் களமிறங்கிய இதர இந்தியா முதல்  இன்னிங்சில் 330 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அடுத்ததாக களமிறங்கிய விதர்பா 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன்களுடன் இருந்தது. வட்கர் 50, கர்னேவர் 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  3ம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. கர்னேவர் விரைவாக ரன் சேர்க்க விதர்பா அணி 300 ரன்களை எட்டியது. வட்கர் 73 ரன் எடுத்த நிலையில் சாஹர் பந்தில் ஆட்டமிழந்தார். மறுமுறையில் வால்வரிசை வீரர்கள் துணையுடன்  கர்னேவர் அபார சதம் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். அவர் 133 பந்தில் 2 சிக்சர், 13 பவுண்டரியுடன் 102 ரன் எடுத்த நிலையில் சாஹர் பந்தில் வெளியேறினார்.  விதர்பா அணி முதல் இன்னிங்சில் 425 ரன்  எடுத்து ஆல் அவுட்டானது.

95 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இதர இந்தியா அணி நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 102 ரன் எடுத்தது. துவக்க வீரர்கள் அகர்வால் 27, அன்மோல்பிரீத் சிங் 6  ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். விஹாரி 40, கேப்டன் ரகானே 25 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இன்று 4ம் நாள் ஆட்ட நடக்க உள்ளது. இன்னும் 2 நாட்கள் எஞ்சியிருப்பதால் விதர்பா அணிக்கு வெற்றி வாய்ப்பு  காணப்படுகிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vidarbha ,Kurneer , Vidarbha ,425 runs, Kurneer
× RELATED ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி: 42-வது...