×

ஐஆர்சிடிசி சார்பில் சுற்றுலா ரயில்கள் இயக்கம்

சென்னை: ஐஆர்சிடிசி துணை பொது மேலாளர் ரவிக்குமார் சென்னையில் நேற்று கூறியதாவது: ஐஆர்சிடிசி சார்பில் மதுரையில் இருந்து சுற்றுலா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி கர்நாடகாவில் உள்ள கோயில்களுக்கு 5 நாட்கள் சுற்றுலா ரயில், 5 நாள் கோவா சுற்றுலா ரயில் மார்ச் 20ம் தேதியும், 5 நாள் ஷீரடி மற்றும் அஷ்டவிநாயகர் யாத்திரை ரயில் மார்ச் 26ம் தேதியும், 12 நாட்கள் மகா சிவராத்திரி 9 ஜோதிர்லிங்க தரிசன சிறப்பு ரயில் இந்த மாதம் 28ம் தேதியும் இயக்கப்படுகிறது. அதே போல், ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு 8 நாள் சுற்றுலா திட்டமும் உள்ளது. அதே போல் இலங்கை, நேபாளம், உள்ளிட்ட நாடுகளுக்கும் விமானப் போக்குவரத்து சுற்றுலா திட்டம் உள்ளது. மேற்கண்ட சுற்றுலா திட்டங்களுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது. இதுதொடர்பாக கூடுதல் தகவல்களை www.irctctourism.com என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளாம்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IRCC , IRCTC, tourism trains
× RELATED தெற்கு ரயில்வே உணவகங்களில் நேரடி உணவு...