×

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை பயனற்றது: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘‘ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக மத்திய தணிக்கை குழு தாக்கல் செய்துள்ள அறிக்கை பயனற்றது’’ என முன்னாள் மத்திய அமைச்சர்  ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து டெல்லியில் நேற்று அவர் அளித்த பேட்டி: ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தக் கோரி  காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், இந்த ஒப்பந்தம்  தொடர்பாக மத்திய தணிக்கை குழு தாக்கல் செய்த அறிக்கையில், எந்தவிதமான பயனுள்ள அம்சங்களும் இடம் பெறவில்லை. இந்த அறிக்கை உண்மையை  மறைக்கவே பயன்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த விஷயத்தில் சிஏஜி தன்னை ஒரு கேலி பொருளாக்க அனுமதித்துள்ளது வேதனை அளிக்கிறது. எதிர்காலத்தில்  மத்தியில் அமையும் அரசு, இந்த அமைப்பின் கவுரவத்தையும், நம்பகத்தன்மையையும் காப்பாற்றும். சிஏஜி தாக்கல் செய்துள்ள அறிக்கை, ரபேல் ஒப்பந்தத்தில்  புதைந்துள்ள உண்மைகளை வெளிக்கொண்டு வரும் என நினைத்தால் ஏமாந்து போக வேண்டியிருக்கும். இந்த ஒப்பந்தத்தில் விலை நிர்ணயம், பணப் பரிமாற்றம்  எப்படி நடந்தது என்பது பற்றி அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CAG ,Chidambaram , Rafael Agreement, CAG Report, P. Chidambaram
× RELATED சிஏஜி அம்பலப்படுத்திய மோடி அரசின்...