×

திருச்சுழி அருகே 95 ஆடுகளை விலைக்கு விற்றுவிட்டு திருடுபோனதாக நாடகமாடியவர் கைது

திருச்சுழி: திருச்சுழி அருகே 95 ஆடுகளை விலைக்கு விற்றுவிட்டு திருடுபோனதாக நாடகமாடியவரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே சவ்வாசுபுரத்தை சேர்ந்த ராமு மகன் சத்தியமூர்த்தி (35). ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவரிடம் கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த காளியப்பன் சில வருடங்களுக்கு முன்பு 250 செம்மறி ஆடுகளை வளர்க்க கொடுத்திருந்தார். பாதுகாப்பு வேலியில் அடைத்திருந்த 95 ஆடுகளை மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டதாக காளியப்பனிடம் தெரிவித்துள்ளார். பின் இதுகுறித்து திருச்சுழி போலீசில் சத்தியமூர்த்தி கடந்த வாரம் புகார் செய்தார். போலீசார் பல இடங்களில் தேடியும் ஆடுகளை காணவில்லை.
சத்தியமூர்த்தி சந்தேகம் ஏற்படவே அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அவர் தனக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்ததால் மதுரை சிந்தாமணியை சேர்ந்த வியாபாரி முருகேசன் என்பவருக்கு 95 ஆடுகளை விலைக்கு விற்பனை செய்துவிட்டதாக தெரிவித்தார். ஆடுகளை விற்பனை செய்துவிட்டு திருடுபோனதாக நாடகமாடிய சத்தியமூர்த்தியை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து ரூ.20 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மதுரை சென்ற போலீசார், முருகேசனிடம் இருந்து 70 ஆடுகளை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : detainee ,Tiruchirappalli , Tiruchuri, goat, arrested
× RELATED பம்பரம் சின்னம் கிடைத்தால் மகிழ்ச்சி.....