கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே ஆங்காங்கே பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்

கோவில்பட்டி: கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே ஆங்காங்கே பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  காட்டுராமன்பட்டியில் முறையாக குடிநீர் வழங்கவில்லை என கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த மக்கள் கோவில்பட்டி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். கடந்த1 மாத காலமாக குடிநீர் வழங்கப்படவில்லை என கிராம மக்கள் தெரிவித்தனர்.

இதே போன்று தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே ஒக்கரைப்பட்டி கிராமத்தில் கடந்த 2 மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கவில்லை என்பது புகாராகும். முறையாக குடிநீர் வழங்க கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசு மருத்துவமனை அருகில் பாரதியார் நகர், பூசாரி பண்ணை உள்ளிட்ட இடங்களில் கடந்த 6 மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்பது கிராம மக்கள் புகார். முறையாக குடிநீர் விநியோகம் வழங்க கோரி மணப்பாறை- புதுக்கோட்டை சாலையில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: