×

பிரதமரால் தூண்டி விடப்படுகிறார் கிரண்பேடி: நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரி நடைபெற்றுவரும் காங்கிரஸ் அரசில் பிரச்னையை உருவாக்க கிரண்பேடியை பிரதமர் மோடி தூண்டி விடுவதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். ஆளுநர் மாளிகை முன் 2-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமைச்சரவை அனுப்பும் கோப்புக்களில் கையெழுத்திடுவது தான் அவரின் வேலை. அமைச்சரவை எடுக்கும் முடிவில் தலையிட அவருக்கு எந்த உரிமையும் கிடையாது. எங்கள் அரசில் பிரச்னையை உருவாக்க பிரதமரால், கிரண்பேடி தூண்டி விடப்படுகிறார் என்றார்.

நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் கிரண்பேடி டில்லி புறப்பட்டு சென்றது குறித்து கருத்து தெரிவித்துள்ள நாராயணசாமி, எங்களுடன் போராட்டத்திற்கு பயந்து தான் கிரண்பேடி வெளியேறி உள்ளார். எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். நிலுவையில் உள்ள 39 கோப்புக்களுக்கு ஒப்புதல் வரை போராட்டத்தை தொடர்வோம் என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Narayanasamy , Narayanaswamy, Kiran Bedi, Congress
× RELATED சீர்காழி அருகே சட்டநாதபுரத்தில்...