×

ஒவைசி வருகை தொடர்பாக அலிகர் முஸ்லிம் பல்கலை.யில் மோதல்: 14 மாணவர் மீது தேசத் துரோக வழக்கு

அலிகர்: அகில் இந்திய மஜ்லிஸ் கட்சி எம்.பி ஒவைசி வருகை தொடர்பாக, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நடந்த மோதல் காரணமாக, மாணவர்  சங்க தலைவர் உட்பட 14 மாணவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில்(ஏஎம்யு) மாணவர் சங்கத்தினர் நடத்தும் நிகழ்ச்சியில், அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின்  ஐதராபாத் எம்.பி ஒவைசிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து இந்நிகழ்ச்சி பற்றி செய்த சேகரிக்க  டி.வி.க்குழுவினர் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்துக்கு சென்றனர்.

 ஒவைசி பல்கலைக்கழக வளாகத்துக்குள் அனுமதிக்க கூடாது என அகிலபாரதிய  வித்தியார்த்தி பரிஷத்(ஏபிவிபி) அமைப்பினர் பல்கலைக்கழகத்தின் நுழைவு வாயில் அருகே போராட்டம் நடத்தினர். அப்போது மாணவர்களிடையே டிவி படப்பிடிப்பு  தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதில் கைகலப்பு ஏற்பட்டு, கேமிராக்கள் உடைக்கப்பட்டன. இந்த மோதல் சம்பவம் தொடர்பாக மாணவர் சங்கத்தின் தலைவர்  சல்ன் இம்தியாஸ் மற்றும் துணைத் தலைவர் உசைபா அமீர் ஆகியோர் உட்பட 14 மாணவர்கள் மீது தேசத்துரோக வழக்கு, கொலை முயற்சி வழக்கு மற்றும் 8  இதர பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : visit ,Aligarh Muslim University ,OVC ,student , Akhil Indian Majlis party MP Owaisi, Owaisi, Aligar Muslim University, student, national treason case
× RELATED பாஜக ஆட்சியில் 140 கோடி இந்தியர்களும்...