×

டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் சிறந்த நகரமாக புனே தேர்வு

புனே: மத்திய அரசு டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தி வருகிறது. இதில் ஸ்மார்ட் சிட்டிகளாக தேர்வு செய்யபட்டுள்ள 100 நகரங்களில்  டிஜிட்டல் பண பரிவர்த்தனையை விரைவாக கொண்டு செல்லும் நகரம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படும் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புறத்துறை  அமைச்சகம் என்று தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் 2018ம் ஆண்டுக்கான சிறந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனை நகரமாக புனே தேர்வு செய்யப்பட்டுள்ளது.

 10 லட்சம் வரையிலான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் பட்டியலில் இந்த விருது கிடைத்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு புனே ஸ்மார்ட் சிட்டி  மேம்பாட்டுக்கழகமும், இதர அமைப்புகளும் தேவையான நடவடிக்கை எடுத்ததால் புனே மக்கள் எளிதில் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறியதாகஸ்மார்ட் சிட்டி தலைமை நிர்வாக அதிகாரி ராஜேந்திர  ஜக்தாப் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pune , Digital cash transaction, Pune
× RELATED 2014க்கு முன் இருந்த நாட்கள் போதும்...