×

நில முறைகேடு விவகாரம்: ராபர்ட் வதேராவிடம் 2ம் நாளாக விசாரணை

ஜெய்ப்பூர்: அமலாக்கத்துறை விசாரணையில் 2வது நாளாக ராபர்ட் வதேரா ஆஜரானர். காங்கிரஸ் ஆட்சியின்போது சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ஸ்கைலைட்  ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம், ராஜஸ்தானின் எல்லைப் பகுதியான பிகானேரில் பல ஏக்கர் நிலத்தை வாங்கியதில் முறைகேடு நடந்ததாக ராபர்ட் வதேரா மீது  குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கதுறை  விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் முதன் முறையாக  நேற்று முன்தினம் ராபர்ட் வதேரா, அவரது தயார் மவுரீன் ஆகியோர் ஆஜரானார்கள். மவுரீன் சிறிது நேரத்தில் அனுப்பப்பட்டார். ஆனால், ராபர்ட் வதேராவிடம் 9  மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.   2வது நாளாக நேற்றும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதற்காக, காலை 10.26  மணிக்கு பலத்த பாதுகாப்புடன் அவர் அமலாக்கத் துறை அலுவலகம் வந்து சேர்ந்தார். அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

‘என் வேலையை பார்க்கிறேன்’: ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், உத்தரப் பிரதேச கிழக்கு பகுதி காங்கிரஸ் பொறுப்பாளரான பிரியங்கா காந்தி கட்சி  தொண்டர்களிடம் நேற்று பேசியபோது, ‘‘எனது கணவரிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்துவது போன்ற விஷயங்கள் தொடர்ந்து கொண்டேதான்  இருக்கும். அதனால், நான் எனது சொந்த வேலையை செய்கிறேன்” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : trial ,Robert Vadra , Land scam, Robert Vadra, Investigation
× RELATED பாரத் பயோடெக் நிறுவனம் தகவல் இந்தியாவில் காசநோய் தடுப்பூசி பரிசோதனை