×

தனுஷ்கோடி கடற்கரையில் 927 ஆமை முட்டை சேகரிப்பு

மண்டபம்: ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதியில், 8 இடங்களில் புதைந்து இருந்த 927 ஆமை முட்டைகளை வனத்துறையினர் சேகரித்தனர். பின்னர் வனத்துறை அமைத்துள்ள பொரிப்பகத்தில் குஞ்சு பொரிப்பதற்கு புதைத்து வைத்தனர். ஆமை முட்டைகளில் இருந்து குஞ்சுகள் 45 நாட்களில் இருந்து 60 நாட்களில் வெளிவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து வனச்சரகர் சதீஷ்குமார் கூறும்போது, ‘‘நடப்பாண்டு இதுவரை 4,674 ஆமை முட்டைகளை சேகரித்து குஞ்சு பொரிக்க வைத்துள்ளனர்’’ என்றார்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : beach ,Dhanushkodi , shore ,Dhanushkodi, 927 Turtle, Egg Collection
× RELATED ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் பாட்டிலால் குத்தி வாலிபர் கொலை