×

ஐந்து பிள்ளைகள் பெற்றும் அவலம் அம்மாவுக்கு உணவு கொடுக்காமல் சித்ரவதை: 4வது மகள் மீது புகார்: விசாரணையை துவக்கினர் போலீசார்

சென்னை: ஐந்து பிள்ளைகளை பெற்றும் ஒரு வேளை உணவு கிடைக்காமல் பட்டினியால் தவித்த தாய், ஒரு கட்டத்தில் தனக்கு உணவு தருமாறு மகளிடம் அறிவுத்த வேண்டும் என்று காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.சென்னை கோடம்பாக்கம் தசராதபுரத்தை சேர்ந்தவர் கஸ்தூரி(73). சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்து விட்டார். இவருக்கு 5 பிள்ளைகள் உள்ளனர்.  தற்போது 4வது மகள் தேவிகலாவிடம் வசித்து வருகிறார்.  இந்நிலையில், தேவிகலா சரியாக தாய் கஸ்தூரிக்கு உணவு கொடுக்காமல் சித்ரவதை செய்து வருவதாகவும், வீட்டை விட்டு வெளியே செல் என்று அடித்து தொந்தரவு செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த கஸ்தூரி ேநற்று கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் மகள் தேவிகலா மீது உணவு கொடுக்காமல் வீட்டை விட்டு வெளியே செல் என்று சொல்கிறார். எனக்கு ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவும்  தங்கும் இடம் கிடைக்க உதவ என் மகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று புகார் அளித்தார். மூதாட்டியின் புகாரின் படி போலீசார் மகள் தேவிகலாவை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும் 73 மூதாட்டிக்கு உணவு கொடுக்காமல் விரட்டுவது சரியல்ல என்றும் புத்திமதி  கூறினார். எனினும் தேவிகலாவிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : children ,investigation , food, mom, CITIZEN,investigation
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...