×

1467 தற்காலிக பணியாளர்கள் பணியிடங்கள் குறைப்பு

* பொதுப்பணித்துறைக்கு அரசு சவுக்கடி
* கொந்தளிப்பில் கீழ் நிலை அதிகாரிகள்

சென்னை: தமிழக பொதுப்பணித்துறையில் 1467 தற்காலிக பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளாக பணியிடங்கள் நிரப்பபடாததால் ரத்து செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுப்பணித்துறை சார்பில், நீர்வளப்பிரிவுக்கு 4,560, கட்டுமான பிரிவில் 2,554 தற்காலிக பணியாளர்கள் நியமிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், தமிழக பொதுப்பணித்துறையில் எழுத்தர், தட்டச்சர், துப்புரவு பணியாளர், காவலர், அலுவலக உதவியாளர், டிரைவர், லஸ்கர்  என 4567 பேர் மட்டுமே பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு மாத ஊதியமாக ₹10 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இந்த தற்காலிக பணியிடங்கள் கூட கிடைக்காமல் பல  பட்டதாரிகள் வேலையின்றி தவித்து வருகின்றனர். குறிப்பாக, ஏதாவது ஒரு பணிக்கு செல்ல வேண்டும் என்று கூறி பட்டதாரிகள் துப்புரவு பணி, ஊர்காவல்படை பணிக்கு விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். மேலும், பல பட்டதாரிகள் பல துறைகளில் அலுவலக உதவியாளர் பணியிடம் கிடைக்குமா என்ற ஏக்கத்தில் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில், பொதுப்பணித்துறை சார்பில் கட்டுமான பிரிவில் 126 பணியிடங்களும், நீர்வளப்பிரிவில் 1431 பணியிடங்களும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காலியாக இருந்ததாக கூறப்படுகிறது.  இதனால், 1556 பணியிடங்களை குறைத்து தற்போது தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில், நீர்வளத்துறைக்கு 3129 பணியிடங்களும், கட்டுமான பிரிவுக்கு 1467 பணியிடங்கள் போதும் என்றும் கூறி விட்டது. 2 ஆண்டுகளாக பணியிடங்கள் ஒதுக்காமல் விட்டதன் விளைவாக அரசே அந்த பணியிடங்களை குறைத்து இருப்பது பொதுப்பணித்துறையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘தமிழகத்தில் லட்சக்கணக்கான பட்டதாரிகள் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதற்காக, அரசு சார்பில் தற்காலிக பணியாளர் பணியிடங்கள் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், அரசு சார்பில், அனுமதியளிக்கப்பட்ட அந்த பணியிடங்களுக்கு கூட ஆட்கள் நியமிக்கவில்லை. பொதுப்பணித்துறையில் பல பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், ஊழியர்கள் கூடுதல் வேலைப்பளுவால் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பணியிடங்களுக்கு தற்காலிக பணியாளர்களை நியமிக்காமல் 2 ஆண்டுகளாக பொதுப்பணித்துறை புறக்கணித்துள்ளது.  நீர்வளப்பிரிவில் 1280 பணியிடங்கள் இரண்டு ஆண்டுகளாக காலியாகவும், நீர்வளத்துறையில் 59 பணியிடங்கள் வேண்டாம் என்றும் தமிழக பொதுப்பணித்துறை சார்பில் கடிதம் எழுதியுள்ளது. இதனால், அரசு அந்த பணியிடத்தை குறைத்து உள்ளது. இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு வேலையில்லாத பட்டதாரிகளின் நலன்கருதி மீண்டும் அந்த பணியிடத்தை கொண்டு வர வேண்டும்’ என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : workplaces , 1467 Temporary ,Staff, Reduction , workplaces
× RELATED அனைத்து பாடத்துக்கும் பட்டதாரி...