×

மகளிர் கால்பந்து மியான்மரிடம் தோற்றது இந்தியா

* நியூசிலாந்து அணியுடன் நடந்த 3வது டி20 போட்டியின்போது, கடைசி ஓவரின் 3வது பந்தில் தினேஷ் கார்த்திக் 1 ரன் எடுக்காமல் தவிர்த்தது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், ‘அடுத்தடுத்த பந்துகளில்  சிக்சர்கள் விளாசி வெற்றியை வசப்படுத்த முடியும் என்று உறுதியாக நம்பினேன். துரதிர்ஷ்டவசமாக அது கைகூடவில்லை. குருணல் பாண்டியாவின் திறமையை குறைத்து மதிப்பிட வேண்டும் என்பது நோக்கம் அல்ல. இருவரும்  சிறப்பாக விளையாடியதால் தான் வெற்றிக்கு மிக அருகே நெருங்க முடிந்தது’ என்று கார்த்திக் கூறியுள்ளார்.
* டெல்லி கிரிக்கெட் சங்க தேர்வுக் குழு தலைவர் அமித் பண்டாரி மீது தாக்குதல் நடத்திய யு-23 வீரர் அனுஜ் தேதாவுக்கு ஆயுள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக டிடிசிஏ அறிவித்துள்ளது.
* செயின்ட் லூசியாவில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியின்போது இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டை தரக்குறைவாக விமர்சித்த வெஸ்ட் இண்டீஸ் வேகப் பந்துவீச்சாளர் ஷேனான் கேப்ரியலுக்கு 4 ஒருநாள் போட்டியில்  விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது.
* இலங்கை அணியுடன் டர்பனில் நேற்று தொடங்கிய முதல் டெஸ்டில், தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 235 ரன்னுக்கு சுருண்டது. முதல் நாள் முடிவில் இலங்கை 1 விக்கெட் இழப்புக்கு 49 ரன் எடுத்துள்ளது.
* இங்கிலாந்து லயன்ஸ் அணியுடனான 2வது டெஸ்டில், இந்தியா ஏ அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 282 ரன் எடுத்துள்ளது. தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல் 81 ரன், ஈஸ்வரன் 117 ரன் விளாசி  ஆட்டமிழந்தனர். பாஞ்ச்சால் 50, கருண் நாயர் 14 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Women ,Myanmar India , Women's,losing,football, Myanmar India
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...