×

பெண் மாற்றுத்திறனாளியை காரில் கடத்த முயற்சி... பெண்ணை கடத்தியவருக்கு பொதுமக்கள் அடி, உதை

மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை காரில் கடத்தியவரை விரட்டி பிடித்த பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். கடத்தப்பட்டவர் நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் ஆவார். இவர் சாலையில் நின்றுகொண்டிருந்த போது அந்த வழியாக காரில் வந்த ஒருவர் அந்த பெண்ணை கடத்த முயற்சித்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் காரை விரட்டி சென்று மடக்கி பிடித்து இளம்பெண்ணை மீட்டனர். பின்னர் ஓட்டுநருக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக காவல் துறையினர் வர தாமதமானதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : kick ,blow , Try to kidnap girl, kidnapped
× RELATED தமிழ்நாட்டில் இன்று முதல் 4...