×

சிஏஜி அறிக்கையால் ரபேல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பரப்பிவந்த பொய் அம்பலமாகியுள்ளது: அருண் ஜெட்லி

டெல்லி: ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கையால் எதிர்க்கட்சிகள் கூறி வந்த பொய் அம்பலமாகி உள்ளது என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், அது தொடர்பான சிஏஜி அறிக்கையை மத்திய அரசு, இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்தது. கடும் அமளிக்கு இடையே தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கை தொடர்பாக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது: ரபேல் விவகாரத்தில் சத்தியம் வெல்லும். சிஏஜி அறிக்கையில் ரபேல் ஒப்பந்தம் முறையாக உள்ளது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. 2007 ஆட்சி - 2016 ஆட்சி இடையேயான மோதலில் குறைந்த விலை, விரைந்த விநியோகம், சிறந்த பராமரிப்பு, குறைந்த விரிவாக்கம் ஆகியன நடந்துள்ளது. நாட்டிற்கு பொய்களை சொல்பவர்களை ஜனநாயகம் எப்படி தண்டிக்கப் போகிறது? என தெரியவில்லை. சிஏஜி அறிக்கை எதிர்க்கட்சிகள் அல்லது மெகா கூட்டணியின் பொய்களை அம்பலப்படுத்தி உள்ளது. இவ்வாறு அருண் ஜெட்லி கூறியுள்ளார். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CAG ,opposition parties ,Rafael ,Arun Jaitley , Arun Jaitley, CAG report, Rafael Agreement,
× RELATED ரஃபேல் விமானம் முதல் தேர்தல்...