×

அதிமுக அரசை காப்பாற்றி கொண்டிருப்பது மோடி அரசு..! மிசாவையே பார்த்த நான், ஐ.டி. ரெய்டுக்கு எல்லாம் அஞ்ச மாட்டேன்: மு.க.ஸ்டாலின் பரப்புரை

அரியலூர்: மிசாவையே பார்த்த நான் ஐ.டி. ரெய்டுக்கு எல்லாம் அஞ்ச மாட்டேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஐ.டி. ரெய்டு மூலம் வீட்டுக்குள் திமுகவினரை முடக்கி வைக்க மத்திய அரசு திட்டமிடுகிறது என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தனது மகள் செந்தாமரை வீட்டில் ஐ.டி. சோதனை நடத்தி வருவதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் ஐடி ரெய்டு நடந்து வரும் நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மு.க.ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார். அப்போது பேசிய அவர், “அனிதாவின் பெயரில் கொளத்தூரில் மாணவிகளுக்கு பயிற்சி கொடுத்து ஆயிரம் பேருக்கு வேலை வாங்கி கொடுத்து உள்ளேன். எனது மகள் செந்தாமரை வீட்டில் 30 பேர் வருமான வரித்துறை அதிகாரிகள் உள்ளே புகுந்து, 100 போலீசார் பாதுகாப்புடன் ரெய்டு நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அதிமுக அரசை காப்பாற்றி கொண்டிருப்பது மோடி அரசு. ஏற்கனவே முதல்வர் ,அதிமுக அமைச்சர்கள். துணை முதல்வரை மிரட்டி உருட்டி வைத்துள்ளார்கள் . அதனால் தமிழ்நாட்டின் உரிமைகள் பறிபோயுள்ளது” என்றார். தொடர்ந்து பேசிய அவர்; மோடிக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இது திமுக மறந்துடாத;நான் கலைஞரின் மகன் இந்த சலசலப்புகளுகெல்லாம் அஞ்சி ஓடி விட மாட்டேன். மிசாவை பார்த்தவன் தான் ஸ்டாலின். நீ எத்தனை ரெய்டு நடத்தினாலும் அதற்கு நாங்கள் கவலைப்பட மாட்டோம். தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் திமுகவினரை விரட்டி ஒதுக்கி படுக்க வைத்து விடலாம் என்று நினைக்கிறார்கள். அது திமுக காரன் கிட்ட நடக்காது. அதிமுக காரர்களிடம் நடக்கும். அவர்கள் எல்லோருமே காலில் விழுவார்கள். நாங்கள் பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சமாட்டோம்.இதற்கெல்லாம் மக்கள் பதில் தரக்கூடிய நாள் தான் வருகின்ற ஏப்ரல் 6″ என்றார்….

The post அதிமுக அரசை காப்பாற்றி கொண்டிருப்பது மோடி அரசு..! மிசாவையே பார்த்த நான், ஐ.டி. ரெய்டுக்கு எல்லாம் அஞ்ச மாட்டேன்: மு.க.ஸ்டாலின் பரப்புரை appeared first on Dinakaran.

Tags : Modi government ,AIADMK government ,Misa ,M.K.Stalin ,I.D. ,DMK ,M. K. Stalin ,
× RELATED தமிழக அரசு உடனடியாக பழைய பேருந்துகளை...