×

இந்தியா கோரி இருந்த கூடுதல் வசதிகளால் தான் ரஃபேல் விமான விலை அதிகரிப்பு : சிஏஜி அறிக்கையில் தகவல்

டெல்லி : ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை விட மோடி தலைமையிலான அரசு 2.86% குறைவான விலையில் ரஃபேல் ஒப்பந்தம் செய்துள்ளது என்று சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு எழுப்பி வரும் நிலையில், மாநிலங்களவையில்141 பக்க சிஏஜி அறிக்கை  தாக்கல் செய்யப்பட்டது.அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது,காங்கிரஸ் ஆட்சிக்கால ஒப்பந்தத்தை விட பாஜக ஆட்சியில் ரபேல் விலை 2.86% குறைந்துள்ளது. அமைச்சர்கள் கூறுவதுபோல் விமான விலை 9% குறைக்கபபடவில்லை. இந்தியா கோரி இருந்த கூடுதல் வசதிகளால் தான் ரஃபேல் விமான விலை அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Riffel ,CAG ,India , Rafael, War, Flight, Contract, Rajya Sabha, CAG
× RELATED சிஏஜி அம்பலப்படுத்திய மோடி அரசின்...