×

வங்கக்கடலில் இன்று மீண்டும் நிலஅதிர்வு: ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு

போர்ட் பிளேர்: வங்கக்கடலில் இன்று அதிகாலை மீண்டும் நிலஅதிர்வு ஏற்பட்டது. அந்தமான் நிகோபார் தீவுக்கு அருகே இன்று அதிகாலை 1:51 மணிக்கு நிலஅதிர்வு ஏற்பட்டது. அந்தமான் தீவில் இருந்து 219 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 4.5 ஆக பதிவானது. அந்தமான் தீவுகளில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் கடலுக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையமும், அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பும் இந்த நிலநடுக்கத்தை உறுதி செய்துள்ளன.  இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கடலில் சுனாமி அலைகள் ஏற்படுவதற்கான அபாயமும் எழவில்லை. எனவே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. நேற்று சென்னைக்கு வடகிழக்கு திசையில் 550 கி.மீ. தொலைவில் வங்ககடலில் நிலஅதிர்வு ஏற்பட்ட நிலையில் இன்று அந்தமானில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bengaluru , Earth quake,today,Bay of Bengal,Richter scale,
× RELATED பெங்களூரு பள்ளி அருகே...