×

முருகன் சிலை கடத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது

சென்னை: முருகன் சிலை கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். திருடுபோன கோயில் சிலைகள் தொடர்பாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் தலைமையில் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் ராஜாராம், காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரம் ஆகியோர் அடங்கிய குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த குழுவினர், சிவக்குமார் என்பவரின் சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள லேத் பட்டறையில் இருந்து, ₹1 கோடிக்கு விற்க முயன்ற தொன்மையான பஞ்சலோக முருகன் சிலையை மீட்டனர்.  3 கிலோ 50 கிராம் எடை கொண்ட இந்த பஞ்சலோக சிலை அரக்கோணத்தை அடுத்த நெமிலியில் உள்ள ஒரு பழமையான கோயிலில் இருந்து திருடப்பட்டது தெரிய வந்தது. இந்த வழக்கில் சிவக்குமார், இஸ்மாயில் ஆகியோரை போலீசார் ஏற்கெனவே கைது செய்திருந்தனர்.  தலைமறைவான முகேஷ் என்பவரை நேற்று கைது செய்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Murukan , Murugan statue kidnapping, arrest
× RELATED சங்கரன்கோவில் அருகே நவீன தீண்டாமை கொடுமை: மேலும் 3 பேர் மீது வழக்குப்பதிவு