×

பசுமை சாலைக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு: கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

சேத்துப்பட்டு:  திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சென்னை- சேலம் 8 வழி பசுமைச்சாலைக்கு ஆட்சேபனை  மனுக்கள் வழங்கிய விவசாயிகளிடம் நேற்று தனி டிஆர்ஓ வெற்றிவேல் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஆத்திரை உலகம்பட்டு, கொலக்கரவாடி உட்பட 12 கிராமங்களை சேர்ந்த 74 பேருக்கு விசாரணைக்கான சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து நேற்று  காலை விவசாயிகள் நேரில் தங்களுடைய விருப்பத்தை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
இந்நிலையில் 8 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பசுமைச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பின் 5 மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள் தலைமையில் 5  பெண்கள் உட்பட 27 பேர், 8 வழிச்சாலைக்கு நிலம் தரமாட்டோம் என்றுக்கூறி கருப்புக்கொடி ஏந்தி கோஷமிட்டவாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர்.  இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அலுவலகத்தில் 8 வழிச்சாலை எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைவர் வழக்கறிஞர் அபிராமன் தலைமையில் இருந்தவர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  தொடர்ந்து ஆட்சேபனை மனு விசாரணைக்காக வந்தவர்கள் தவிர மற்றவர்களை உள்ளே அனுமதிக்காததால் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.  இதையடுத்து 27 பேர் மட்டும்  தங்கள் கருத்தை டிஆர்ஓ வெற்றிவேலிடம் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : land ,road , Green road, land, black market, farmers, demonstration
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!