×

உயர்மின் கோபுரம் அமைக்கும் திட்டம் விவசாயிகள் போராட வைகோ வலியுறுத்தல்

மொடக்குறிச்சி: விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்து விவசாயிகளும் ஒன்றாக சேர்ந்து போராட வேண்டும் என்று வைகோ கூறினார்.மொடக்குறிச்சி அடுத்த முத்தாயிபாளையத்தில் உயர்மின் கோபுரம் அமைக்கும்  திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று நேரில் சந்தித்து பேசினார்.பின்னர், வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:பிரதமர் மோடி தொகுதியான வாரணாசியில் 1,200 கிலோவாட் மின்சாரத்தை கடலுக்கு அடியிலும், பூமிக்கு அடியிலும் கொண்டு செல்ல அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஆனால், தமிழகத்தில் மட்டும் விவசாயிகளின் விளைநிலங்கள்  வழியாக மின்சாரத்தை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.உயர்மின்னழுத்த கோபுரத்திற்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் இன்று (13ம் தேதி) உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்திருந்தனர். அதற்கு அனுமதி மறுத்து உண்ணாவிரதத்துக்கு நிலம் வழங்கிய விவசாயிகளை மிரட்டியது  கண்டனத்துக்குரியது. விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்து விவசாயிகளும் ஒன்றாக சேர்ந்து போராட வேண்டும். இவ்வாறு அவர்  கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vyco ,Upper Tower , Vyco urging , farmers ,fight,construction , Upper Tower
× RELATED பண பட்டுவாடாவையும் மீறி தமிழகம்,...