×

பள்ளி மாணவியை வனப்பகுதிக்குள் அழைத்து சென்று மிரட்டி பலாத்காரம்: போக்சோ சட்டத்தில் இமாம் கைது

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே 15 வயது பள்ளி மாணவியை காரில் வனப்பகுதிக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்த பள்ளி வாசல் இமாம் மீது போலீசார் போக்சோ சட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு  செய்தனர்.திருவனந்தபுரம் அருகேயுள்ள நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்தவர்ஷெபீக் அல் காசினி (38). இவர் அருகில் உள்ள தொழிக்கோடு முஸ்லிம் பள்ளிவாசலில் இமாம் ஆக இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு  முன் மாலை பள்ளி விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 15 வயது மாணவியை ஆசைவார்த்தை கூறி தனது காரில் ஏற்றியுள்ளார். பின்னர் அப்பகுதியில் உள்ள விதுரா பேப்பாறை வனப்பகுதிக்கு கொண்டு சென்று மிரட்டி  மாணவியை பலாத்காரம் செய்துள்ளார்.


பின்னர் காரில் சிறுமியுடன் வனப்பகுதியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது அப்பகுதியை சேர்ந்த சிலர் சந்தேகத்தின்பேரில் காரை மறித்து விசாரித்தனர். அப்போது அந்த சிறுமி தனது மனைவி என கூறியுள்ளார். ஆனால் சிறுமி பள்ளி சீருடையில் இருந்ததை சுட்டிக்காட்டி பொதுமக்கள் விசாரித்ததில், நடந்த சம்பவம் குறித்து மாணவி அழுது கொண்டே கூறியுள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் தொழிக்கோடு ஜமா அத் நிர்வாகிகளிடம்  கூறினர்.இதையடுத்து அவரை இமாம் பதவியில் இருந்து ஜமா அத் நிர்வாகிகள் நீக்கினர்.இந்நிலையில், நேற்று தொழிக்கோடு பள்ளிவாசல் ஜமா அத் தலைவர் விதுரா போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் இமாம் ஷெபீக் அல் காசினி மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது  செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : forest ,Bochos ,Imam , school girl,taken,forest, threatened, Imam arrested in the Bochos law
× RELATED பாலக்கோடு வனப்பகுதியில் பெண் யானை சுட்டுக்கொலை