×

பட்டுக்கோட்டை அருகே கிராம மக்கள் சாலை மறியல்.. கஜா புயல் தாக்கி 89 நாட்கள் ஆகியும் நிவாரண பொருட்கள் வழங்கவில்லை என புகார்

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அருகே கஜா புயலால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு இன்னும் நிவாரண பொருட்கள் வழங்கவில்லை என கூறி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கஜா’’ புயல் தாக்கி நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த தென்னை, வாழை, நெல் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் அனைத்தும் சேதம் அடைந்தது.

சுமார் 45 லட்சம் தென்னை மரங்கள் சூறைக்காற்றில் வேரோடு முறிந்து விழுந்துள்ளன. கஜா புயல் தாக்கி இதுவரை 89 நாட்கள் ஆகின்றன. ஆனால் இதுவரை நிவாரண பொருட்கள் வழங்காததை கண்டித்து பட்டுக்கோட்டை அருகே கிராம மக்கள் பட்டுக்கோட்டை-தஞ்சாவூர் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் கிராம மக்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த வட்டாட்சியர் அருள்பிரகாசத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஒரு வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் உறுதியளித்ததின் பேரில் போராட்டத்தை கிராம மக்கள் தற்காலிகமாக கைவிட்டனர். மறியல் போராட்டத்தால் பட்டுக்கோட்டை- தஞ்சாவூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : road ,Pattukkottai ,storm ,Kaja , Pattukkottai, villagers, road stalks, Ghaja storm, relief supplies
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...