×

இலவச பயணம் இன்று வரை நீட்டிப்பு: மெட்ரோ ரயில்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகள் இன்றும் இலவச பயணம் செய்யலாம் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுப் போக்குவரத்தின் பயன்பாட்டை அதிகரிக்கவும், சாலைகளில் வாகன நெரிசலை குறைக்கும் வகையில் கொண்டுவரப்பட்டது மெட்ரோரயில் திட்டம். கடந்த 2009ஆம் ஆண்டு இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவங்கப்பட்டன. 42 கிலோமீட்டர் தொலைவிலான முதல் வழித்தடத்திட்டத்தில் நீல நிற வழித்தடம் வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலும், பச்சை நிற வழித்தடம் சென்டிரல் முதல் செய்ன்ட் தாமஸ் மவுன்ட் வரையிலும் என இரண்டு வழித்தடங்களில் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டது.

இதில் ஏற்கனவே பச்சைநிற வழித்தடத்தில் ரயில்சேவை முழுமையாக இயக்கப்பட்டு வந்த நிலையில், நீல நிற வழித்தில் சென்னை விமானநிலையம் முதல் டி.எம்.எஸ் வரையில் மட்டுமே இரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் டி.எம்.எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான 10கிலோமீட்டர் சுரங்கபாதை மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்ததையடுத்து, அதன் சேவையை பிரதமர் மோடி நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.  மெட்ரோ ரயில் முதல் வழித்தடத்தில் சேவை முழுமையாக துவங்கியுள்ளதையடுத்து கட்டணத்தையும் குறைத்து அறிவித்துள்ளது மெட்ரோ நிர்வாகம், வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலான நீலநிற வழித்தடத்திற்கு அதிபட்சம் 60ரூபாய், சென்டிரல் ரயில்நிலையம் முதல் கோயம்பேடு வழியாக ஆலந்தூர் வரையிலான பச்சை நிற வழித்தடத்திற்கு அதிகபட்சமாக 50ரூபாய் என டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் முதல் வழித்தடத்தில் சேவை முழுமையாக துவங்கியுள்ளதையடுத்து. பொதுமக்களை ஈர்க்கும் வகையில் நேற்று ஒருநாள் முழுவதும் பொதுமக்கள் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே நேற்று டிஎம்எஸ் மற்றும் விமானநிலையம் இடையே ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ சேவை நேற்று 6 மணி நேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கோளாறு சரிசெய்யப்பட்டதாகவும், வழக்கமான சேவை இன்று தொடரும் எனவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் இலவச சேவை இன்று ஒருநாள் நீட்டிப்பு செய்யப்படுவதாகவும், பயணிகள் இன்று இரவு 10 மணி வரை இலவச பயணம் அனுபவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலவச பயணம் அறிவிப்பால் நேற்றைப்போல் இன்றும் மெட்ரோ ரயிலில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : trips , Chennai Metro Train, Free Travel, Metro Admin
× RELATED உக்ரைன் மீது தாக்குதலை...