×

2017-2018ம் ஆண்டு டாஸ்மாக் மூலம் ரூ.26,798 கோடி வருவாய்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று 2017-2018ம் ஆண்டிற்கான தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) ஆண்டறிக்கையை அமைச்சர்  தங்கமணி தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: 2017-2018ம் ஆண்டில் இந்திய தயாரிப்பு, அயல்நாட்டு மது மற்றும் பீர் ஆகியவற்றின் விற்பனை தொகை  ரூ.31,757.71 கோடியாகும். இதர வரிகள் மற்றும் கட்டணங்கள் மூலம் 2017-2018ம் ஆண்டில் அரசுக்கு கிடைத்த வருவாய் ரூ.26,797.96 கோடியாகும். அறிக்கைக்கு  உட்பட்ட ஆண்டில் ரூ.16.91 கோடி ஆதாயம் ஈட்டியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : TASMAC , Tasmachu, Revenue, Minister, Goldman
× RELATED டாஸ்மாக் கடையை உடைக்க முயன்ற கைதான நான்கு வாலிபர்களுக்கு சிறை