×

அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினுடன் வைகோ, காதர்மொகிதீன் சந்திப்பு

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலைவர் காதர்மொகிதீன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் ஆகியோர் நேற்று சந்தித்தனர்.  மதிமுக சார்பில் திமுக தலைவர் கலைஞரின் புகழ்போற்றும் விழா திருச்சியில் நடைபெறுகிறது. அதற்கான அழைப்பிதழை வழங்குவதற்காக நேற்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று இரவு 7.03 மணிக்கு அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார். பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் அழைப்பிதழை வழங்கினார். பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது: வரும் 24ம் தேதி திருச்சியில் திமுக தலைவர் கலைஞரின் புகழ்போற்றும்  விழா மதிமுக சார்பில் நடத்தப்படுகிறது. தமிழர்களின் தொன்மையும், தீர்மையும் என்ற தலைப்பில் கலைஞரின் உரையை  வீரபாண்டி எழுதியுள்ளார் அந்த விழாவிற்கு தலைமை தாங்குகிறேன்.

 திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நூலை வெளியிடுகிறார். அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம், திமுக நிர்வாகிகள் விழாவில்  பங்கேற்கின்றனர். ஏற்கனவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வதாக இசைவு தெரிவித்திருந்தார். விழாவிற்கான அழைப்பிதழை அவரிடம்  வழங்கினேன் என்றார். அப்போது திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதா? என்றதற்கு தெரியாது என்று கூறினார். அதைப் போன்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொகிதீன், சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் ஆகியோரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கட்சியின் மாநில மாநாடு அழைப்பிதழை வழங்கினார்கள்.பின்னர் காதர்மொகிதீன் நிருபர்களிடம் கூறியதாவது: வரும் 16ம் தேதி மதுரையில் எங்கள் கட்சியின் மாநில மாநாடு நடைபெறுகிறது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நிறைவுரையாற்றுகிறார். இந்த விழாவிற்கான அழைப்பிதழை அவரிடம் வழங்கினோம் தமிழக அரசின் சூழ்நிலை குறித்தும் பேசினோம்.  
 
மேலும், 60 லட்சம் பேருக்கு ரூ.2 ஆயிரம் தருவதாக அறிவித்து இருக்கிறது. கஜா புயலுக்கே இன்னும் சரியாக நிவாரணம் வழங்காத நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இந்த தொகை எல்லோருக்கும் வழங்க வேண்டும். ரூ.2 ஆயிரம் வழங்குவதால் தமிழக மக்கள் ஏமாந்து வாக்களிக்க மாட்டார்கள். நாங்கள்  திமுக கூட்டணியில் தொடர்கிறோம். தேர்தல் அறிவிப்பு வெளியானதும் யாருக்கு எந்த தொகுதி, எத்தனை தொகுதி என்ற பேச்சுவார்த்தை நடக்கும், இதுவரை  எந்த பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஏற்கனவே 40 தொகுதிகளிலும் வென்றது போல் இந்த முறையும் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vaiko ,Katharagodin ,Annatha Cherthala ,MK Stalin , Anna Arivalayam, MK Stalin, Vaiko, Katharagodigin
× RELATED தமிழகம் முழுவதும் மக்களிடம் எழுச்சி...