×

மம்தாவை தொடர்ந்து பிரதமர் மோடிக்கு எதிராக டெல்லியில் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்

* ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் ஆதரவு
* எதிர்க்கட்சிகளின் அடுத்தடுத்த போராட்டத்தால் பரபரப்பு
புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி மத்திய அரசை கண்டித்து தர்ணா போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, டெல்லியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரத போராட்டத்தை நேற்று நடத்தினார். இப்போராட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. ‘‘ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத பிரதமர் மோடிக்கு சரியான பாடம் புகட்டுவோம்’’ என சந்திரபாபு நாயுடு ஆவேசமாக எச்சரித்துள்ளார்.மாநில பிரிவினைக்குப் பின், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க பாஜ தலைமையிலான மத்திய அரசு உறுதி அளித்து இருந்தது. ஆனால், அதை பிரதமர் மோடி நிறைவேற்றாததால், அதிருப்தி அடைந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து பிரிந்தார். இதைத்தொடர்ந்து, சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி அவர் பல்வேறு போராட்டங்களையும், உண்ணாவிரதத்தையும் நடத்தி வருகிறார். வரும் மக்களவை தேர்தலில் பாஜவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் தீவிர முயற்சியிலும் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார்.இந்நிலையில், ஆந்திர மறுசீரமைப்பு சட்டத்தின்படி மத்திய அரசு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரியும் முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லியில் நேற்று காலை 8 மணிக்கு ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அவர், ஆந்திர பவனில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அங்கேயே உண்ணாதேர்தலில் பாஜவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் தீவிர முயற்சியிலும் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், ஆந்திர மறுசீரமைப்பு சட்டத்தின்படி மத்திய அரசு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரியும் முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லியில் நேற்று காலை 8 மணிக்கு ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அவர், ஆந்திர பவனில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அங்கேயே உண்ணாவிரதத்தை தொடங்கினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, திமுக சார்பில் எம்பி திருச்சி சிவா, தேசியவாத காங்கிரஸ் எம்பி மஜீத் மேமன், திரிணாமுல் காங்கிரசின் தெரிக் ஓ பிரைன். சமாஜ்வாடி நிறுவனர் முலாயம் சிங், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆனந்த் சர்மா, அகமது படேல் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் போராட்டத்தில் நேரில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர். மேலும் கட்சி தொண்டர்கள், பல்வேறு அமைப்பினரும் கலந்து கொண்டனர்.அப்போது, சந்திரபாபு நாயுடு பேசியதாவது:குஜராத்தில் கடந்த 2002ல் நடந்த கலவரத்தின்போது, ராஜதர்மம் பின்பற்றப்படவில்லை என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் குறிப்பிட்டுள்ளார். அதேபோல தற்போது, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விஷயத்திலும் ராஜ தர்மம் பின்பற்றப்படவில்லை.
எங்களுடைய உரிமைகள் மறுக்கப்படுகின்றன. ஆந்திர மாநிலத்துக்கு மத்திய அரசு இழைத்த அநீதி, தேசிய ஒற்றுமையில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆந்திராவின் 5 கோடி மக்கள் சார்பில் மத்தியில் ஆளும் பாஜ அரசை எச்சரிக்கிறேன். ஆந்திரா மறுசீரமைப்பு சட்டத்தில் உறுதியளித்தபடி சிறப்பு உரிமைகளை வழங்க வேண்டும் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்தவே இங்கு வந்துள்ளேன். அதுமட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையில் என்னையும், என் மக்களையும் விமர்சிக்கும் பேச்சும் வேண்டாம். அது தேவையற்றது. நான் முதல்வராக என் கடமையை செய்து கொண்டிருக்கிறேன். தெலுங்குதேசம் கட்சியின் நிறுவனர் என்.டி.ராமாராவ் கூறுகையில், ‘யாரேனும் உங்களுடைய சுயமரியாதையைச் சீண்டினால், அவர்களுக்குத் தகுந்த பாடம் கற்பித்துவிடுங்கள்’ என்றார். எனவே, நாங்கள் பொறுமை காக்க மாட்டோம. மோடிக்குத் தகுந்த பதிலடி கொடுப்போம்.இந்த நாட்டை ஆள்வதற்கு தகுதியற்றவர் மோடி. அவர் குண்டூருக்கு சென்றதன் மூலம், வெந்த புண்ணில் உப்பைத் தடவி உள்ளார். டெல்லியில் நாங்கள் அமர்வதை தவிர்த்து விடலாம் என நீங்கள் நினைத்தால், அது தவறு. எங்களின் நட்பு கட்சிகளின் துணையுடன் நாங்கள் எங்களின் இலக்கை அடைவோம்.மாநிலக் கட்சிகள் தங்கள் உரிமைக்காக போராடினால், சிபிஐ அமைப்பை ஏவிவிடுகிறது மத்திய அரசு. மன்மோகன் சிங் அரசு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வாக்குறுதி அளித்தது.

அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாஜவும் ஆதரித்தது. ஆனால், இப்போது நிதியமைச்சர் சாத்தியமில்லை என்கிறார். நாடாளுமன்ற பகுதியில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. அதனால்தான் இங்கு போராட்டத்தை நடத்துகிறோம். இவ்வாறு சந்திரபாபு நாயுடு ஆவேசமாக பேசினார். உண்ணாவிரதத்தை மதசார்பற்ற ஜனதாதள தலைவர் தேவகவுடா தண்ணீர் கொடுத்து முடித்து வைத்தார்.  இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து நாயுடு மனு அளிக்க உள்ளார். முன்னதாக, கடந்த வாரம் மத்திய அரசை கண்டித்து மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம் நடத்தியது அரசிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்போது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த சந்திரபாபு நாயுடு, தங்களின் அடுத்தகட்ட போராட்டத்தை டெல்லிக்கு கொண்டு செல்வதாக கூறியிருந்தார். அவரது நேற்றைய உண்ணாவிரத போராட்டம், டெல்லியை மையமாக கொண்டு எதிர்கட்சிகள் நடத்த உள்ள போராட்டத்திற்கு தொடக்கமாக அமைந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chandrababu Naidu ,Delhi , Chandrababu Naidu,fast , Delhi , PM Modi
× RELATED ஆந்திர தேர்தலில் 4 தொகுதியில் தெ.தே....