×

மாணவி சோபியா மீதான வழக்கை தள்ளுபடி செய்யக்கோரிய வழக்கில் தமிழிசைக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ்

மதுரை: மாணவி சோபியா மீதான வழக்கை தள்ளுபடி செய்யக்கோரிய வழக்கில் தமிழிசைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையிலிருந்து விமானத்தில் கடந்த செப்டம்பர் 3-ம் தேதி  பிற்பகல் 12 மணிக்கு தூத்துக்குடிக்கு சென்றார். விமானத்தில் தமிழிசை இருக்கைக்கு அருகில் தூத்துக்குடி கந்தன் காலனியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு டாக்டர் சாமியின் மகள் லூயிஸ் சோபியா (22) அமர்ந்து பயணித்துள்ளார்.

கனடாவில் பி.எச்டி படிக்கும் மாணவி லூயிஸ் சோபியா அங்கிருந்து சென்னை வந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்துள்ளார்.விமான பயணத்தின் போது தமிழிசையை பார்த்ததும் ஆவேசமடைந்த லூயிஸ் சோபியா பா.ஜ.வுக்கு எதிராக கோஷமிட்டார். தூத்துக்குடி விமான நிலையம் வந்த பின்னரும் கோஷமிட்டார்.அப்போது தமிழிசை சவுந்தர்ராஜனுக்கும், லூயிஸ்சோபியாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழிசை சவுந்தரராஜன் விமான நிலைய நிலையத்திற்கு உட்பட்ட புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். இந்த புகார் மனுவின் அடிப்படையில் மாணவி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தனக்கு முற்றிலும் எதிரான வழக்கு, நான் தான் பாதிக்கப்பட்டுள்ளேன் ஆனால் எனது மனுவை எந்த பரிசீலனையும் செய்யாமல் என் மீதே வழக்கு தொடரப்பட்டுள்ளது, எனவே இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று மாணவி சோபியா ஒரு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை ஏற்கனவே விசாரணை செய்த நீதிமன்றம் அந்த வழக்கு தொடர்பாக மேல்விசாரணை செய்வதற்கு ஒரு இடைக்காலத்தடை விதித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விதிக்கப்பட்ட தடைக்கு மேலும் 4 வார காலம் நீட்டித்தும், மேலும் இந்த வழக்கு ரத்து செய்வது குறித்து புகார் மனு தாரரான பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 4 வார காலங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : branch ,Tamilnadu ,Sophia , Sophia, TAMILY, EYCORD BRANCH, NOTICE
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி