×

நாமகிரிப்பேட்டை அருகே கருப்பணார் கோயிலில் விடிய, விடிய முப்பூஜை : 4000 பேருக்கு கறி விருந்து

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே கள்ளவழி கருப்பணார் கோயிலில் நேற்று விடிய, விடிய முப்பூஜை விழா நடந்தது. இதில் 4 ஆயிரம் பேருக்கு கறி விருந்து வழங்கப்பட்டது.  நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அருகே ஆர்.புதுப்பட்டியில் கள்ளவழி கருப்பணார் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் தை மாத கடைசி வாரத்தில் முப்பூஜை திருவிழா நடைபெறுவது வழக்கம். இதேபோல், நேற்று முப்பூஜை திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் கள்ளவழி மலைமேல் இருக்கும் கருப்பணார் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஆடு, கோழி, பன்றிகளை பலியிட்டனர்.

மேலும் காவுசோறு கூரை மீது வீசி விசேஷ பூஜை செய்யப்பட்டது. இந்த விழாவில் 200 கிலோ ஆடு, 50 கிலோ கோழி, 450 கிலோ பன்றி இறைச்சி மற்றும் 500 கிலோ பச்சரிசி கொண்டு சாதம் வடித்து, உருண்டையாக்கி உடனுக்குடன் பக்தர்களுக்கு விடிய,விடிய கறிவிருந்து வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கு சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு விருந்து சாப்பிட்டனர். மேலும், வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் பச்சரிசி, ஆடு, கோழி மற்றும் பன்றிகளை கொண்டு வந்து சுவாமிக்கு பலியிட்டு காணிக்கை செலுத்தி, நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vidyaparayam ,Namagiripattu ,Vidiyo Moopujai , Namagiripettai, Kalpana Temple, Culinary feast
× RELATED திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும்...