உலகக்கோப்பைக்கான அணியில் பண்ட், விஜய் சங்கர், ரகானேவின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது: எம்.எஸ்.கே. பிரசாத்

மும்பை: ரிஷப் பண்ட், விஜய் சங்கர் மற்றும் அஜிங்கியா ரகானே ஆகியோர் உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கிட்டத்தட்ட 15 பேர் கொண்ட அணி தேர்வுக்குழுவால் உறுதி செய்யப்பட்டுவிட்டன. மேலும் ஒரே இடம் காலியாக உள்ள நிலையில் இறுதி செய்யப்பட்ட இந்திய அணி ஐ.சி.சி. வழங்கிய காலக்கெடுவிற்கு முன்பு அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.  

ஆல்ரவுண்டரான விஜய் சங்கர் நியூசிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் உலகக்கோப்பை அணியில் அவரும் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. கண்டிப்பாக ரிஷப் பண்ட்-ம் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. உலகக்கோப்பை அணியில் இடம்பெற வீரர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. வீரர்களை தேர்வு செய்வதில் தேர்வுக்குழுவுக்கு இது ஒரு ஆரோக்கியமான தலைவலி தான் என எம்.எஸ்.கே. பிரசாத் கூறினார். கடந்த ஒரு ஆண்டில் ரிஷப் பண்ட்-ன் ஆட்டத்தில் அனைத்து வகையான போட்டிகளிலும் நல்ல முன்னேற்றம் உள்ளது. இந்தியா ஏ அணியில் விளையாடி வருவதாலும் அவரது பேட்டிங்கில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது. இது அவருக்கு நல்ல அனுபவமும் கூட. இளம் வீரராக இருந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி அணியில் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார்.

எம்.எஸ். தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்குடன், ரிஷப் பண்ட் பார்க்கப்பட்டார். ஆனால் தினேஷ் கார்த்திக் கடந்த ஆண்டில் சிறப்பாக பேட்டிங் செய்து அணியில் நிரந்தர இடத்தை பிடித்தார். மேலும் தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் செயல்படுகிறார். இதனால் பண்ட் பேட்ஸ்மேன் ஆக சேர்க்க முடியுமா என தேர்வுக்குழு யோசித்து வருகிறது. ஆனால் பார்மில் இல்லாத கே.எல்.ராகுல் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி ரன்கள் சேர்த்தால் அவரை அணியில் சேர்க்கவும் யோசித்து வருவதாக பிரசாத் தெரிவித்தார்.

நியூசிலாந்து தொடரில் விஜய் சங்கர் 3-வது வீரராக களமிறங்கி சிறப்பாக பேட்டிங் செய்தார். கிடைத்த குறைந்தபட்ச வாய்ப்புகளை விஜய் சிறப்பாக பயன்படுத்திக்கொண்டார். கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய ஏ சுற்றுப்பயணங்கள் மூலம் அவரை சீர்ப்படுத்தி வருகிறோம் என தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தெரிவித்தார். கடந்த ஆண்டு இங்கிலாந்து தொடர் வரை, கே.எல்.ராகுல் மூன்றாவது தொடக்க ஆட்டக்காரராக கருதப்பட்டார்.

தொடர்ந்து அணியில் ரன் சேர்க்க முடியாமல் பார்ம் அவுட்டில் இருப்பதால், தேர்வாளர்கள் மீண்டும் ரகானேவை அணியில் சேர்ப்பது குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு தென்னாபிரிக்க தொடர் முதல் ரகானே இந்திய ஒருநாள் அணியில் இடம்பெறவில்லை. இருப்பினும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அவர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் சிறப்பாக விளையாடினாலும் அவரது ஸ்டரைக் ரேட் மட்டுமே பிரச்சனையாக உள்ளது. எனினும் உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பெறுவதற்கான போட்டியில் ரகானேவும் உள்ளார் என எம்.எஸ்.கே. பிரசாத் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bund ,team ,Vijay Shankar ,Rakana ,World Cup ,MSK Prasad , Pant, Vijay Shankar, Rahane,team,India,World Cup,MSK Prasad
× RELATED இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டுக்கு மருத்துவ பரிசோதனை