×

வாய் கொழுப்பு அதிகமானால் இதுதான் நடக்கும் ஏம்பா செருப்பைக் கூடவா சோதனை செய்வீங்க?: சுங்கத்துறையினரிடம் வசனம் பேசிய கடத்தல் ஆசாமி சிக்கினார்

சென்னை: வாய் கொழுப்பு அதிகமானால் நாமே மாட்டிக் கொள்வோம். அதுபோன்ற ஒரு சம்பவம் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நடந்துள்ளது. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் நேற்று  காலை 8.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையை சேர்ந்த முகமது (33) என்பவர் சுற்றுலா பயணியாக  மலேசியாவுக்கு சென்றுவிட்டு வந்தார். அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது அவரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அவர் மலேசியவில் இருந்து ஸ்கேட்டிங்க் விளையாட்டு வீரர்கள் அணியக்கூடிய சக்கரங்கள்  பொருத்தப்பட்ட ஷூக்கள் ஒரு ஜோடி வாங்கிவந்தார். அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதிகாரிகள் அவரிடம் ஸ்கேட்டிங்க் குறித்து விசாரித்தனர்.

அப்போது முகமது தனது உறவினர் ஒருவர் ஸ்கேட்டிங் பயிற்சி செய்வற்காக வாங்கி வந்ததாக கூறினார். ஆனாலும் அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதை சோதனையிட முயன்றனர். அப்போது வாய் மூடிக்  கொண்டு சும்மா இருக்காமல் செருப்புகளை கூடவா சோதனை செய்வாங்க என்று சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ஞாபகப்படுத்தினார். என்னடா பயணியே ஒரு சந்தேகத்தை கிளப்பி அதில் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறாரா என்ற  சந்தேகம் சுங்கத்துறையினருக்கு வந்தது.அதற்குள் முகமது நான் போட்டுள்ள செருப்புகளை சோதனை செய்வீர்களா? இது என்ன நியாயம்? என்று கேட்டார். அதற்கு அதிகாரிகள், நாங்கள் சந்தேகப்பட்டால் எதை வேண்டுமானாலும்  சோதனை செய்வோம் என்றனர், ஷூவை பிரித்துப் பார்த்தனர். அதன் பின்பு அந்த வீல்களை கழட்டிப் பார்க்க தயாராகினர்.

 உடனே பயணி நான் அங்கிருந்து வாங்கிவந்த ஷூவை ஏன் இப்படி சின்னா பின்னமாக பிரிக்கிறீர்கள் என்று ஆத்திரத்துடன் கேட்டார். முகமது தொடர்ந்து அதிகாரிகளை கேள்வி கேட்டதால் அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம்  வலுப்பெற்றது. அதிகாரிகள் ஷூவை அக்குவேறு ஆணிவேறாக கழட்டிப் பார்த்தனர். அந்த ஷூவுக்குள் ஒரு தங்க செயின், 4 தங்க துண்டுகள் இருந்தன. அதன் மொத்த எடை 225 கிராம். அதன் சர்வதேச மதிப்பு ரூ.8 லட்சம்.  அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். செருப்பை ஏன் சோதனையிடுகிறீர்கள் என்று கேட்டீர்களே இப்போது என்ன சொல்கிறீர்கள் என்று அதிகாரிகள் முகமதுவை பார்த்து அதிகாரிகள் கேட்டதற்கு எதுவும் சொல்லமுடியாமல்  வெட்கித் தலைகுனிந்தார். இதைதான் வாய் கொழுப்பு என்பது. பின்னர் முகமது இதேபோல் இதற்கு முன் கடத்தலில் ஈடுபட்டுள்ளாரா? என்ற கோணத்தில் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mouth fat, customs, dialogue, abduction
× RELATED சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் 3 பேர் கைது!