வசந்த பஞ்சமியை முன்னிட்டு கும்பமேளாவில் ஒரு கோடி பக்தர்கள் புனித நீராடினர்

அலகாபாத்:  உத்தரப் பிரதேசத்தில் வசந்த பஞ்சமியை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில்  ஒரு கோடி பக்தர்கள் புனித நீராடினர். உத்தரப் பிரதேசத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா விழா கொண்டாடப்படுகிறது. கடந்த மாதம் 15ம் தேதி கும்பமேளா தொடங்கியது. கங்கை,  யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிங்கும் திரிவேணி சங்கமத்தில் குளித்தால் பாவங்கள் நீங்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. எனவே,  கும்பமேளாவின் போது திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தினமும் புனித நீராடல்  நிகழ்ந்தாலும் கும்பமேளா நடைபெறும் காலத்தில் வரும் முக்கியமான 3 நாட்கள் விசேஷ புனித நீராடல் நாட்களாக கருதப்படுகிறது.

அதன்படி, கடந்த மாதம் 15ம் தேதி மகரசங்ராந்தி, கடந்த 4ம் தேதி மவுளி அமாவாசை ஆகிய நாட்களில் முதல், 2வது புனித நீராடல் நாட்களாக கடைப்பிடிக்கப்பட்டது,  இதனை தொடர்ந்து கும்பமேளாவின் மூன்றாவது மற்றும் கடைசி புனித நீராடல் நேற்று கொண்டாடப்பட்டது. சரஸ்வதி தேவி தோன்றிய நாளாக கருதப்படும் வசந்த  பஞ்சமியான நேற்று, கும்பமேளாவின் மூன்றாவது முக்கிய புனித நீராடல் நடைபெற்றது. இதை முன்னிட்டு கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், அதிகாலை  சூரிய உதயத்துக்கு முன்னரே பக்தர்கள் வருகை தொடங்கியது.  சூரிய உதயத்துக்கு முன்னர் வரை 50 லட்சம் பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.   பக்தர்கள் புனித நீராடுவதற்கு வந்த வண்ணம் இருந்தனர். நேற்று மட்டும் ஒரு கோடி பக்தர்கள் நீராடினர். அடுத்தமாதம் 4ம் தேதி கும்பமேளா நிறைவடைகிறது.  இதுவரை 14.94 கோடி பக்தர்கள் கும்பமேளாவிற்கு வந்து சென்றுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: