×

வங்கி வாடிக்கையாளர்களிடம் ரகசிய எண் கேட்டு நாடு முழுவதும் கைவரிசை: ஜார்கண்ட் மாநில கொள்ளை கும்பல் சென்னையில் சுற்றி வளைத்து கைது

ரூ.25 லட்சம், நூற்றுக்கணக்கான போலி கிரெடிட், ஏடிஎம் கார்டு பறிமுதல்

சென்னை: வங்கி வாடிக்கையாளர்களின் ரகசிய எண்ணை கேட்டு நாடு முழுவதும் பல கோடி சுருட்டிய ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரபல ஏடிஎம் கொள்ளையர்கள் 3 பேரை, கொல்கத்தா சைபர் க்ரைம் போலீசார் சென்னையில்  சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கட்டு கட்டாக ரூ.25 லட்சம் பணம் மற்றும் போலி ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆயிரக்கணக்காண வங்கி  வாடிக்கையாளர்களிடம் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ரகசிய எண் மற்றும் ஏடிஎம் கார்டில் உள்ள 16 இலக்கம் கொண்ட எண்ணை பெற்று பல லட்சம் ரூபாய் எடுத்து மோசடி செய்துள்ளதாக கொல்கத்தா சைபர் க்ரைம்  போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்தது. அதன்படி கொல்கத்தா சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து வங்கி மோசடி கும்பலை தேடி வந்தனர்.வங்கி கொள்ளையர்கள் சென்னையில் தங்கி இங்குள்ள ஏடிஎம்களில்,  கொல்கத்தா வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து கொல்கத்தா சைபர் க்ரைம் போலீசார் நேற்று முன்தினம் விமானம் மூலம் சென்னை வந்தனர். பின்னர்  சென்னை மாநகர காவல் துறை உதவியுடன் வங்கி கொள்ளையர்களை அவர்களின் செல்போன் சிக்னல் உதவியுடன் தேடினர்.

அப்போது, சேப்பாக்கத்தில் உள்ள பிரபல ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தது தெரியவந்தது. உடனே கொல்கத்தா சைபர் க்ரைம் போலீசார் திருவல்லிக்கேணி போலீசார் உதவியுடன் அதிரடியாக ஓட்டலுக்குள் புகுந்து  சோதனை செய்த போது, 101வது அறையில் வங்கி  கொள்ளையர்கள் தங்கி இருந்தது தெரியவந்தது. உடனே 3 கொள்ளையர்களையும் கொல்கத்தா சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.25 லட்சம்  பணம் மற்றும் 30க்கும் மேற்பட்ட போலி ஏடிஎம் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேரையும் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ஜார்கண்ட்  மாநிலத்தை சேர்ந்த விஜயகுமார் மண்டல்(22), ஜூகேந்தர் குமார் மண்டல்(23), பாஸ்கர் குமார்(25) என தெரியவந்தது.

இவர்கள்,தனித்தனி குழுக்களாக பிரிந்து நாடுமுழுவதும் வங்கி வாடிக்கையாளர்களிடம் பேசி, அவர்களின் வங்கி கணக்கு எண் மற்றும் ஏடிஎம் கார்டின் ரகசிய எண் மற்றும் 16 இலக்கம் கொண்ட எண்ணை கேட்டு பெற்றுகொண்டு  தொடர் மோசடியில் ஈடுபட்டு வந்து தெரியவந்தது. இவர்கள் பின்னணியில் பெரிய அளவில் மோசடி கும்பல் இயங்கி வருவதும் விசாரணையில் தெரியவந்தது. இதுவரை இந்த மோசடி கும்பல் நாடுமுழுவதும் பல கோடி ரூபாய்  மோசடி செய்து இருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் கடந்த இரண்டு வாரங்களாக தங்கி சென்னை நகரம் முழுவதும் உள்ள ஏடிஎம் மையங்களில் போலி ஏடிஎம் கார்டுகள் மூலம் பணத்தை எடுத்ததும்  தெரியவந்துள்ளது. இதையடுத்து வங்கி ஏடிஎம் கொள்ளையர்கள் 3 பேரையும் கொல்கத்தா சைபர் க்ரைம் போலீசார் நேற்று மேற்கு வங்கத்திற்கு அழைத்து சென்றனர்.

போலீசார் பிடியிலிருந்து இருந்து தப்பியோட்டம்:

வங்கி வாடிக்கையாளர்களிடம் ஏடிஎம் பின் நம்பரை பெற்று பலகோடி மோசடி செய்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 3 கொள்ளையர்களை கொல்கத்தா சைபர் கிரைம் போலீசார் திருவல்லிக்கேணி போலீசார் உதவியுடன்  சேப்பாக்கம் நட்சத்திர விடுதியில் வைத்து கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் திருவல்லிக்கேணி போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கொல்கத்தா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  இதையடுத்து 3 பேரையும் காவல் நிலையத்தில் இருந்து கொல்கத்தா போலீசார் அழைத்து ெசல்லும் வழியில் பாஸ்கர் குமார்(25) என்பவர் போலீசார் பிடியில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத போலீசார்  நடந்த சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி போலீசாரிடம் கூறினர். தப்பிச் சென்ற கொள்ளையனை பிடித்துக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டனர். இச்சம்பவத்தால் திருவல்லிக்கேணி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Customers ,country ,bank customers ,state robbers gang ,Chennai ,Jharkhand , Bank customer, secret number, country, jharkhand state, robbery gang, chennai, arrest
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!