×

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி ஆரோவில்லில் மாரத்தான் ஓட்டம்: 3 ஆயிரம் பேர் பங்கேற்பு

வானூர்: ஆரோவில்லில் இன்று நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டு ஓடினர். விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் உதயமான பிப்ரவரி மாதத்தில் ஆண்டு தோறும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தியும், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், உலக அமைதி வேண்டியும் மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று 12வது ஆண்டு மாரத்தான் ஓட்டம் 42 கிலோ மீட்டர், 21 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர், சிறுவர்களுக்கான 5 கிலோ மீட்டர் என 4 பிரிவுகளின் கீழ் நடந்தது. இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், ஆரோவில்வாசிகள், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த 3 ஆயிரம் பேர் கலந்து  கொண்டனர்.

ஆரோவில் மையப்பகுதியான மாத்திர் மந்திர் பகுதியில் இருந்து மாரத்தான் ஓட்டம் துவங்கியது. தொடர்ந்து கோட்டக்கரை, இடையஞ்சாவடி, குயிலாப்பாளையம், பொம்மையார்பாளையம் வழியாக இந்த ஓட்டம் நடைபெற்றது. 21 கிலோ மீட்டர் ஓட்டத்தில் ரயில்வே ஏடிஜிபி சைலேந்திரபாபு, தமிழக முதன்மை வன காப்பாளர் மாலிக், நடிகை அமலாபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கோட்டக்குப்பம் டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Auroville ,participants , Marathon, Auroville, environmental protection,
× RELATED ஆரோவில் உதயதின விழாவில் நெருப்பு...