×

திருக்கானூர்பட்டியில் ஜல்லிக்கட்டு மாடுமுட்டி ஏட்டு 3 பெண் போலீஸ் படுகாயம்

தஞ்சை: தஞ்சை அருகே உள்ள திருக்கானூர்பட்டியில்  நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 800 காளைகள் பங்கேற்றன. காளை முட்டியதில் பாதுகாப்புக்கு நின்ற ஏட்டு, 3பெண் போலீசார்  காயம் அடைந்தனர். தஞ்சை மாவட்டம் திருக்கானூர்பட்டியில் புனித அந்தோணியார் கோயில் உள்ளது. இக்கோயிலில்  பொங்கல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. கோயில் அருகே உள்ள திடலில் நடந்த இந்த ஜல்லிக்கட்டு நிகழச்சிக்கு எம்பி வைத்திலிங்கம் தலைமை வகித்து போட்டியை துவக்கி வைத்தார்.  தஞ்சை ஆர்டிஓ சுரேஷ், தஞ்சை சரக டிஐஜி லோகநாதன், எஸ்பி மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 15க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் காளைகள், வீரர்களை பரிசோதனை செய்து போட்டிக்கு அனுமதித்தனர். மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் முதலில் கோயில் காளையும், தொடர்ந்து 800 காளைகள் வாடி வாசல் வழியே அவிழ்த்து விடப்பட்டன.   

பல சுற்றுகளாக 300 மாடு பிடி வீரர்கள் களத்தில் இறங்கி காளைகளை பிடித்தனர். பிடிபடாத காளைகளுக்கும், காளைகளை பிடித்த வீரர்களுக்கும் ரொக்கம், கட்டில், பீரோ, குத்துவிளக்கு, சைக்கிள், ஹெல்மெட்  பாத்திரம் போன்ற  ரூ.3லட்சம் மதிப்பிலான பரிசு பொருள்கள்  வழங்கப்பட்டன. இதில்  காளை  முட்டியதில் பாதுகாப்புக்கு நின்ற தஞ்சை ஏட்டு திராவிடமணி மற்றும் 3 பெண் போலீசார் படுகாயமடைந்தனர்.  4 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டினர். மேலும் காளை முட்டியதில்  10க்கும் மேற்பட்ட பார்வையாளர், வீரர்கள் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவர்கள் கொண்ட குழுவினர் சிகிச்சை அளித்தனர்.  பாதுகாப்பு பணியில் 520 போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tirukanurpatti , Jallikattu, female policemen, injured,
× RELATED தஞ்சை, திருச்சியில் ஜல்லிக்கட்டு; 1,300...