×

சாரதா சிட்பண்ட் வழக்கு கொல்கத்தா போலீஸ் கமிஷனரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை: ஷில்லாங் அலுவலகத்தில் ஆஜரானார்

ஷில்லாங்: சாரதா சிட்பண்ட் மோசடி தொடர்பான விசாரணைக்காக ஷில்லாங்கில்  உள்ள சிபிஐ அலுவலகத்தில் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜிவ் குமார் ஆஜரானார்.மேற்கு வங்கத்தில் நடந்த சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கை கொல்கத்தா சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வந்தது. இதன் தலைவராக தற்போதைய கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜிவ்  குமார் இருந்தார். அதன் பிறகு, இந்த வழக்கு சிபிஐ.க்கு மாற்றப்பட்டது. அப்போது, இந்த வழக்கில் பல முக்கிய ஆவணங்கள் மாயமானது குறித்து விளக்கம் கேட்க ராஜிவ் குமாரை நேரில்  ஆஜராகும்படி சிபிஐ உத்தரவிட்டது. ஆனால், அவர் ஆஜராகவில்லை.

இதனால், அவரை கைது செய்வதற்காக கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்துக்கு சிபிஐ அதிகாரிகள் கடந்த 3ம் தேதி  சென்றனர். ஆனால், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைதும் செய்தனர். மேலும், சிபிஐ நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தர்ணா  போராட்டம் நடத்தினார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராஜிவ் குமாரை விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் உள்ள சிபிஐ  அலுவலகத்தில் ராஜிவ் குமார் நேற்று ஆஜரானார். அவரிடம் இரவு 9 மணி வரையிலும்  அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.அவருடன் வந்த வக்கீல்கள் சிபிஐ அலுவலகத்தில் உள்ளே  அனுமதிக்கப் படவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CBI ,police commissioner ,Shillong , CBI , police commissioner's, assassination case, Shillong
× RELATED குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில்...