×

நாளை காலை 8 முதல் 2 மணி வரை வேளச்சேரி மின்சார ரயில்கள் ரத்து

சென்னை: சென்னை கடற்கரை வேளச்சேரி இடையே நாளை காலை 8-2 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:சென்னை கடற்கரையில் இருந்து நாளை காலை 8, 8.20, 8.40, 9, 9.20, 9.40, 9.50, 10, 10.20, 10.40, 11, 11.20, 11.40, 12, 12.20, 12.40, 1, 1.20, 1.40 மணி ஆகிய நேரங்களில் வேளச்சேரிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மேலும் சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு பிற்பகல் 2 மணி முதல் ரயில்கள் இயக்கப்படும்.

 அதைப் போன்று வேளச்சேரியில் இருந்து சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் காலை 8.10, 8.30, 8.50, 9.10, 9.30, 9.50, 10.10, 10.30, 10.40, 10.50, 11.10, 11.30, 11.50, 12.10, 12.30, 12.50, 1.10, 1.30 மணி மற்றும் 1.50 ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மேலும் வேளச்சேரி- சென்னை கடற்கரை இடையே பிற்பகல் 2.10 மணி முதல் ரயில்கள் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Velakkeri Electric Railways , Velachery, electric trains, cancellation
× RELATED கொளத்தூர் தொகுதி பெரியார் நகரில் ₹110...