×

சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு ; விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்தில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ்குமார் ஆஜர்

ஷில்லாங் : சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கின் விசாரணைக்காக ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ்குமார் ஆஜரானார். சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கை கொல்கத்தா சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வந்தது. இதன் தலைவராக தற்போதைய கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் இருந்தார். அதன் பிறகு, இந்த வழக்கு சிபிஐ.க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் பல முக்கிய ஆவணங்கள் மாயமானது குறித்து விளக்கம் கேட்க ராஜீவ் குமாரை நேரில் ஆஜராகும்படி சிபிஐ உத்தரவிட்டது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. இதனால், அவரை கைது செய்வதற்காக கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்துக்கு சிபிஐ அதிகாரிகள் சில தினங்களுக்கு முன் சென்றனர். ஆனால், அவர்களை கொல்கத்தா போலீசார் கைது செய்தனர்.

சிபிஐ நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தர்ணா போராட்டம் நடத்தினார். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், சிபிஐ விசாரணைக்கு ராஜீவ் குமார் ஆஜராக வேண்டும். ஆனால், அவரை சிபிஐ கைது செய்யக் கூடாது என உத்தரவிட்டது. இதையடுத்து, மம்தா தனது தர்ணாவை வாபஸ் பெற்றார். இந்நிலையில் சாரதா சிட்பண்ட் ஊழல் தொடர்பாக ஷில்லாங் பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ராஜீவ் குமார் இன்று ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மம்தா மீது மோடி குற்றச்சாட்டு

மோசடி செய்தவர்களை நாங்கள் வெளிநாட்டிலிருந்து இங்கு கொண்டு வருகிறோம். ஆனால், இங்கு இருப்பவர்கள் மோசடியில் ஈடுபட்டவர்களை பாதுகாக்கின்றனர். மோசடியில் ஈடுபட்டவர்களை காப்பாற்ற ஒரு முதல்வர் தர்ணாவில் ஈடுபட்டதாக  வரலாறு இல்லை. சிட்பண்ட் மோசடியில் ஈடுபட்டவர்களை காப்பாற்ற மம்தா ஏன்  தர்ணாவில் அமர்ந்தார் என்பதை அறிய ஏழை மக்கள் விரும்புகின்றனர். இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள்,  அவர்களை காப்பாற்றுபவரை இந்த காவலாளி தப்ப விட மாட்டான்.  ஊழலில் ஈடுபடும் அனைவரும் மோடியை கண்டு பயப்படுகின்றனர். அடுத்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வீழ்ச்சியை சந்திக்கும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Saradha ,Rajeevkumar Azhar ,Kolkata ,office ,investigation ,CBI , Saradha Scindet Fraud, CBI Office, Kolkata, Police Commissioner, Raju Kumar, Mamata Banerjee, PM Modi
× RELATED கொல்கத்தாவில் 21 மணி நேரம் விமான சேவை ரத்து